• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் சம்பளப் பிரச்சினை பிரதமரின் கவனத்திற்கு!

அந்தஸ்துக்காக அரசாங்கம் எவரையும் பாதுகாக்காது – பிரதமர் தெரிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/09
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

எவருடைய பதவி அந்தஸ்தையோ அல்லது தராதரத்தையோ கருத்திற்கொண்டு அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்கப் போவதில்லை என்றும், தற்போதைய நீதித்துறையின் செயற்பாடுகளின் ஊடாக அது மிகத் தெளிவாக வெளிப்படுகின்றது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்:

2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதியளித்தபடி, சட்டத்தின் ஆட்சி மற்றும் அனைவருக்கும் சமமான நீதித்துறைக் கட்டமைப்பின் கீழ், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்ட வழக்குகள் தொடர்பில் தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, தகுதியான வழக்குகள் தொடர்பில் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மொத்தம் 102 வழக்குகள் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

அவற்றில் 65 வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

34 வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்யாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 3 வழக்குகள் தொடர்பில் மீண்டும் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நீதித்துறையின் செயற்பாடுகளை அவதானித்தால், எவரையும் பாதுகாக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்பது மிகத் தெளிவாகப் புலப்படும்.

இந்த நாடாளுமன்றத்தில் தற்போது இருப்பவர்கள் மட்டுமன்றி, தற்போது நாடாளுமன்றத்தில் இல்லாத பலருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

15 முதல் 20 ஆண்டுகள் பழமையான சம்பவங்கள் தொடர்பில் மீண்டும் விசாரணைகளை மேற்கொண்டு நாம் இந்த வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. அதற்காகச் சற்று கால அவகாசம் தேவைப்படும்.

நாங்கள் தராதரம் பார்த்துத் தீர்மானங்களை எடுப்பதில்லை. சம்பந்தப்பட்ட வழக்குகள் தொடர்பான சாட்சியங்களின் அடிப்படையிலேயே சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றோம்.

அரசாங்கம் எக்காரணம் கொண்டும் எவரையும் பாதுகாக்காது.

கடந்த கால அரசாங்கங்களில் ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொண்டவர்களே, தற்போது அரசாங்கம் நீதித்துறைச் செயல்முறையைச் சரியாக முன்னெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் ‘யாரையாவது பாதுகாக்கிறீர்களா?’ எனக் கேள்வி எழுப்புவது வேடிக்கையானது,” என தெரிவித்தார்.

Related

Tags: harini amarasooryasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

Next Post

இடம் பெயர்ந்த மலையக மக்களுக்கும், வீடமைக்க காணியும், ரூ.50 இலட்சமும் தர பட வேண்டும்!.

Related Posts

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு
இலங்கை

2026-06-28
ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரிப்பு!
இலங்கை

இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சி

2026-06-28
புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!
இலங்கை

பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 5 பயணிகள் கைது!

2026-06-28
காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்!

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர் திருவிழா
இலங்கை

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர் திருவிழா

2026-06-28
Next Post
இடம் பெயர்ந்த மலையக மக்களுக்கும், வீடமைக்க காணியும், ரூ.50 இலட்சமும் தர பட வேண்டும்!.

இடம் பெயர்ந்த மலையக மக்களுக்கும், வீடமைக்க காணியும், ரூ.50 இலட்சமும் தர பட வேண்டும்!.

களுவாஞ்சிக்குடி முகத்துவாரம் வெட்டப்பட்டது !

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் இன்றுடன் நிறைவு!

சிவனொளிபாத மலையை தரிசிப்பதற்கு இனி எவ்வித அபாயமும் இல்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
edit post
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
edit post
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
edit post
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
edit post
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
edit post
மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

0
edit post
ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சி

0
edit post
பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

0
edit post
புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!

புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!

0
edit post
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 5 பயணிகள் கைது!

0
edit post
மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

2026-06-28
edit post
ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சி

2026-06-28
edit post
பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

2026-06-28
edit post
புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!

புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!

2026-06-28
edit post
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 5 பயணிகள் கைது!

2026-06-28

Recent News

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

2026-06-28
ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சி

2026-06-28
பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

2026-06-28
புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!

புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!

2026-06-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.