முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்து மார்ச் மாதத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
UPDATE
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மார்ச் மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் இன்று தொடர்புடைய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, சுமார் 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிக அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

















