களுவான்கேணி, ஏறாவூர் கடற்கரைப் பகுதியில் இருந்து நேற்று (28) மீன்பிடி நடவடிக்கைக்கா சென்ற படகு கவிழ்ந்ததில் ஒரு மீனவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன நபரின் சகோதரர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, ஏறாவூர் பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
காணாமல் போன மீனவர் களுவான்கேணியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரைத் தேடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.














