அம்பாறை மாவட்ட நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் மிக நீண்ட கால தேவையாக இருந்த தாதியர்களுக்கான தங்குமிட விடுதி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.பி.எம். மசூத் தலைமையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ். ஆர்.இஸ்ஸதீன் அவர்களினால் நேற்றையதினம் (10)திறந்து வைக்கப்பட்டது.
இத்திறப்பு விழாவிற்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுப் பிரிவின் வைத்தியர் எம்.சி.எம். மாஹிர் அவர்கள் உட்பட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.














