இத்தாலியில், முகமூடி அணிந்த கும்பல் ஒன்று பரபரப்பான நெடுஞ்சாலையில், ஹாலிவுட் பட பாணியில் பணம் கொண்டு சென்ற வேனில் கொள்ளையை அரங்கேற்றியது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான இத்தாலியின் புக்லியா மாகாணத்தில், அதிவேக நெடுஞ்சாலையில் பணம் ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்றது.
இதை, முன்கூட்டியே அறிந்த கொள்ளை கும்பல் ஒன்று, முகமூடி அணிந்தபடி, துப்பாக்கிகளுடன் பொலிஸ் வாகனத்தில் வந்திறங்கியது.
சாலையில் இருந்தவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், பணம் ஏற்றிச் சென்ற வேனை தடுத்து நிறுத்த, ஒரு லொறி மற்றும் வேனை தீ வைத்து எரித்தனர்.
பின்னர் வேனை சுற்றி வளைத்து, வெடிகுண்டுகளை வைத்து கதவுகளை தகர்த்துள்ளனர்.
தகவல் அறிந்த வந்த பொலிஸ் , அவர்களை பிடிக்க முயன்றனர்.
பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி அந்த கும்பல் தப்பித்தது.
விடாது துரத்திய பொலிசார் , இரண்டு பேரை மட்டுமே பிடித்த நிலையில் ஆறு பேர் தப்பியோடியுள்ளனர்.

















