ஈரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானத்தில் இருந்த விமானி ஒருவர் மீட்கப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
F-15 ரக போர் விமானம் வெள்ளிக்கிழமை அன்று ஈரானியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
பெப்ரவரி மாத இறுதியில் போர் தொடங்கியதிலிருந்து, ஈரானியப் பிரதேசத்தில் விழுந்து நொறுங்கிய முதல் அமெரிக்க விமானம் அந்தப் போர் விமானம் ஆகும்.
வெள்ளிக்கிழமை F-15 ஸ்ட்ரைக் ஈகிள் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அமெரிக்கா ஒரு தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது.
அதேநேரத்தில், எதிரி விமானியை காட்டிக் கொடுப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்றும் ஈரான் உறுதியளித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க இராணுவ வரலாற்றில் சனிக்கிழமை இரவு நடந்த அபாயகரமான மற்றும் துணிச்சலான நடவடிக்கையின் பின்னணியில் காணால்போன விமான மீட்கப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனது உத்தரவின் பேரில், அவரை மீட்க, உலகின் மிகவும் கொடிய ஆயுதங்களைக் கொண்ட டஜன் கணக்கான விமானங்களை அமெரிக்க இராணுவம் அனுப்பியது.
மீட்கப்பட்ட விமானயின் உடலில் காயங்கள் உள்ளன, எனினும் அவர் நலமாகிவிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காணாமல் போன விமானியை மீட்கும் நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான சிறப்புப் படை வீரர்கள் ஈடுபட்டதாக பல அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேநேர், காணாமல் போன F-15 விமானக் குழு உறுப்பினரைத் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கையின் போது, மத்திய ஈரானில் ஒரு அமெரிக்க விமானத்தை அழித்ததாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறியதாக ஈரானிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தெற்குப் பகுதியான இஸ்பஹானில் இஸ்லாமியப் போராளிகளால் அந்த அமெரிக்க விமானம் அழிக்கப்பட்டது இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையை மேற்கோள் காட்டி தஸ்னிம் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும், சமூக ஊடகங்களில் மீட்பு நடவடிக்கை குறித்த தனது விளக்கத்தில், ட்ம்பர், எந்தவொரு அமெரிக்க விமானமும் அழிக்கப்பட்டதாகக் குறிப்பிடவில்லை என்று குறிப்பிட்டார்.













