2026 இந்தியன் பிரீமியர் லீக் உள்ளிட்ட சர்வதேச பிரீமியர் லீக் போட்டிகளில் தான் பங்கேற்பதற்கு ஏதுவாக, ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம் (SLC) தனக்கு தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்குமாறு கட்டாயப்படுத்தக் கோரி. கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை உத்தரவு கோரி இலங்கை கிரிக்கெட் வீரர் நுவான் துஷார தாக்கல் செய்திருந்த மனுவைத் திரும்பப் பெற்றுள்ளார்.
இன்று (23) நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஜி.ஜி. அருள்பிரகாசம், ஐ.பி.எல். தொடரின் பல போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனால், மனுதாரர் இந்த விண்ணப்பத்தை மேற்கொண்டு தொடர வேண்டாம் என முடிவு செய்து, வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரியுள்ளார் என்றார்.
அந்த கோரிக்கையின் அடிப்படையில், மனுவைத் திரும்பப் பெறுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன், அதனைத் தள்ளுபடி செய்யவும் உத்தரவிட்டது.

















