மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது.
அங்கு 142 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
நாளை மாலை வாக்குப்பதிவு முடிந்ததும், தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின்றன.
மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23, 29 ஆகிய திகதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 152 தொகுதிகளுக்கு கடந்த 23 ஆம் திகதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.
முதல்கட்டத் தேர்தலில் 93.19 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், மீதம் உள்ள 142 தொகுதிகளில் நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.
இரண்டாம் கட்ட தேர்தலுக்காக, மொத்தம் 41,001 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அங்கு இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணியாளர்கள் வாக்குச்சாவடிகளை நோக்கிப் பயணிக்க தொடங்கியுள்ளனர்.















