• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆபிாிக்கா
ஆப்பிரிக்காவின் நீண்டகால ஆட்சியாளர்: உகாண்டா ஜனாதிபதியாக 7-வது முறையாக முசெவேனி பதவியேற்பு!

ஆப்பிரிக்காவின் நீண்டகால ஆட்சியாளர்: உகாண்டா ஜனாதிபதியாக 7-வது முறையாக முசெவேனி பதவியேற்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/13
in ஆபிாிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசெவேனி (81), அந்நாட்டின் ஜனாதிபதியாக ஏழாவது முறையாக இன்று பதவியேற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தப் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

பதவியேற்பு விழாவை முன்னிட்டு தலைநகர் கம்பாலாவில் கவச வாகனங்கள் மற்றும் டாங்கிகளுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பொது அமைதியைப் பேணும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர்.

பதவியேற்பு விழாவில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய முசெவேனி:

“எனது இந்தப் புதிய பதவிக்காலம் அனைத்து உகாண்டா மக்களுக்கும் ‘உறக்கமில்லாத’ (சுறுசுறுப்பான) காலமாக அமைய வேண்டும்.” எனவும் “மக்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், செல்வத்தைப் பெருக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் முசெவேனி 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி அவர் 2031-ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருப்பார்.

இருப்பினும், இந்தத் தேர்தல் முடிவுகளை அவரது பிரதான எதிராளியான பாப் இசைக்கலைஞர் பாபி வைன் (Bobi Wine) நிராகரித்துள்ளார்.

தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

44 வயதான எதிர்க்கட்சித் தலைவர் பாபி வைன் , தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் நாட்டை விட்டு வெளியேறினார்.

1986-ஆம் ஆண்டு ஒரு கிளர்ச்சிப் படைத் தலைவராக அதிகாரத்தைக் கைப்பற்றிய முசெவேனி, அதன்பின்னர் நடைபெற்ற ஏழு தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆப்பிரிக்காவின் நீண்டகால ஆட்சியாளர்களில் ஒருவராகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related

Tags: ukandaworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜோதிடர் ரிக்கி வெற்றிவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்த முடிவை திரும்பப் பெற்ற முதல்வர் விஜய்!

Next Post

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் கையாளும் அளவு அதிகரிப்பு!

Related Posts

அமெரிக்கா-தென் கொரியா கூட்டுப் பயிற்சிகளுக்கு முன்னதாக வட கொரியா ஏவுகணை சோதனை!
உலகம்

அமெரிக்கா-தென் கொரியா கூட்டுப் பயிற்சிகளுக்கு முன்னதாக வட கொரியா ஏவுகணை சோதனை!

2026-08-12
வட்டி விகிதங்களை மேலும் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை – மத்திய வங்கி ஆளுநர்!
ஆசிரியர் தெரிவு

வட்டி விகிதங்களை மேலும் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை – மத்திய வங்கி ஆளுநர்!

2026-08-12
ஒரு தசாப்த காதலுக்கு இனிய முடிவு: ஜோர்ஜினாவை மணந்தார் ரொனால்டோ!
ஆசிரியர் தெரிவு

ஒரு தசாப்த காதலுக்கு இனிய முடிவு: ஜோர்ஜினாவை மணந்தார் ரொனால்டோ!

2026-08-12
22 ஆவது திருத்தத்துக்கு BASL கடும் எதிர்ப்பு: நீதித்துறையின் சுதந்திரம் ஆபத்தில்? 
ஆசிரியர் தெரிவு

22 ஆவது திருத்தத்துக்கு BASL கடும் எதிர்ப்பு: நீதித்துறையின் சுதந்திரம் ஆபத்தில்? 

2026-08-12
கொலம்பியாவை உலுக்கிய பேரழிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 250-ஐ விஞ்சியது! 
உலகம்

கொலம்பியாவை உலுக்கிய பேரழிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 250-ஐ விஞ்சியது! 

2026-08-12
முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!
ஆசிரியர் தெரிவு

முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!

2026-08-12
Next Post
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் கையாளும் அளவு அதிகரிப்பு!

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் கையாளும் அளவு அதிகரிப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அம்பாறையிலும் ஆரம்பம்!

வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இன்று இரண்டாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

யாழில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தவருக்கு சிறை தண்டனை!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.