நாட்டின் ஆயுதத் தரத்தை மேம்படுத்தும் வகையில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூடாது என ஈரான் அதி உச்ச தலைவர் அயத்துலா மொஜ்தபா கமெனி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஈரான் மீது உடனடியாக கடுமையான ராணுவ தாக்குதலை தொடுத்து, அதன் அணு ஆயுதக் கனவை தகர்க்க வேண்டும் என்பதில் நெதன்யாகு உறுதியாக உள்ளார்.
ஆனால் டிரம்ப் , துாதரக ரீதியிலான பேச்சுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்ற தொனியில் பேசிவருகின்றார் .
சமீபத்தில் கூட, வளைகுடா நாடுகளின் கோரிக்கையை ஏற்று, ஈரான் மீதான ஒரு திட்டமிடப்பட்ட ராணுவ தாக்குதலை டிரம்ப் தற்காலிகமாக ஒத்திவைத்தார்.
இந்த சூழலில் நாட்டின் ஆயுதத் தரத்தை மேம்படுத்தும் வகையில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூடாது என ஈரான் ஆட்சியாளர் மொஜ்தபா உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மொஜ்தபா கமேனியின் இந்த உத்தரவு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு மேலும் விரக்தியை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.














