இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பிற்கு இணையாக, லங்கா ஐ.ஓ.சி (LIOC) மற்றும் சினோபெக் (Sinopec) ஆகிய நிறுவனங்களும் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தங்களது எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளன.
இருப்பினும், சீன நிறுவனமான சினோபெக் (Sinopec) சுப்பர் டீசல் விலையில் மாத்திரம் எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன், அவர்கள் தற்போதும் ஒரு லீற்றர் சுப்பர் டீசலை 600 ரூபாய் என்ற பழைய விலையிலேயே விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள புதிய விலை விபரங்கள் வருமாறு:
ஒக்டேன் 92 பெற்றோல் – பழைய விலை 410 .00, அதிகரிக்கப்பட்ட தொகை 24 .00 , புதிய விலை 434.00
ஒக்டேன் 95 பெற்றோல் பழைய விலை 470.00, அதிகரிக்கப்பட்ட தொகை 25.00 , புதிய விலை 495.00
ஒட்டோ டீசல் பழைய விலை 392.00, அதிகரிக்கப்பட்ட தொகை 15 .00, புதிய விலை 407.00
சுப்பர் டீசல் பழைய விலை 458 .00, அதிகரிக்கப்பட்ட தொகை 20.00 , புதிய விலை 478.00
மண்ணெண்ணெய் பழைய விலை 265.00 , அதிகரிக்கப்பட்ட தொகை 20 .00, புதிய விலை 285.00
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய நாட்களாக உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள் மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டே இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த திடீர் விலை உயர்வு காரணமாகப் பொதுப் போக்குவரத்து, முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.














