ஓமான் வளைகுடாவில் விதிக்கப்பட்ட முற்றுகையை மீறிய கப்பல் ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.
காம்பியன் கொடி ஏற்றப்பட்ட கப்பல் ஒன்று ஈரானிய துறைமுகம் ஒன்றை நோக்கிச் செல்ல முயன்றபோது, அதன் இயந்திர அறை மீது ஹெல்ஃபயர் ஏவுகணை ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கப்பல் ஈரானியத் துறைமுகம் ஒன்றை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், அது அமெரிக்க முற்றுகையை மீறுவதாக 20க்கும் மேற்பட்ட முறை எச்சரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினுமு், கப்பல் குழுவினர் அந்த அறிவுறுத்தல்களைப் புறக்கணித்துத் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
இந்நிலையிலேயே, கப்பலை ஒன்று செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் மேலும் தெரிவித்துள்ளது.
ஈரானுடனான கடல்வழி வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், தற்போதைய முற்றுகையை அமல்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, மே 29ம் திகதி நிலவரப்படி, 116 வர்த்தகக் கப்பல்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
மேலும் பல கப்பல்கள் ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழைய முடியாதபடி செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















