யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து கடந்த புதன்கிழமை இரவு கடலுக்கு சென்ற நான்கு மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை.
இவர்களைத் தேடும் பணி நேற்றும் நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
கடற்படையின் படகுகள் மற்றும் மீனவர்களின் படகுகள் இணைந்து தேடுதலில் ஈடுபட்டன .
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் மற்றும் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் மொத்தமாக நால்வர் கடந்த புதன்கிழமை இரவு 12 மணிக்கு தொழிலுக்காக கடலுக்கு சென்றனர்.
இவர்கள் நால்வரும் இதுவரை வீடு திரும்பவில்லை பல்வேறு வழிகளில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
எனவே காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு கடற்படையினரின் உதவியும் கோரப்பட்டுள்ள நிலையில் மீனவர்கள் தமது உறவுகளை எதிர்பார்த்தவாறு காத்திருக்கின்றனர்.
இவர்களில் முனை பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவரும் கற்கோளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மூவரும் உள்ளடங்குகின்றனர்.















