• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
திருகோணமலையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் மத்திய வங்கியின் விசேட நிகழ்வு!

திருகோணமலையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் மத்திய வங்கியின் விசேட நிகழ்வு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/03
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஏனைய சிரேஷ்ட அலுவலர்களின் பங்கேற்புடன் 2026 ஜூன் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் இலங்கை மத்திய வங்கி திருகோணமலையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. 

அரசாங்க அலுவலர்கள், வர்த்தக சமூகம் அதேபோன்று பொதுமக்கள் மத்தியில் டிஜிட்டல் கொடுப்பனவு முறைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதனை இந்நிகழ்ச்சித்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

இந்நிகழ்ச்சித்திட்டம் வங்கிகள், வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் மற்றும் ஏனைய ஆர்வலர்களின் பங்கேற்புடன் திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கார் தரிப்பிட வளாகத்தில் காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணி வரை இடம்பெறும். 

‘டிஜிட்டல் கொடுப்பனவுகளின் ஊடாக எதிர்காலத்தை வடிவமைப்போம்’ எனும் கருப்பொருளின் கீழ் நிதியியல் நிறுவனங்களுடனும் ஏனைய ஆர்வலர்களுடனுமான கூட்டிணைப்புடன் மத்திய வங்கியினால் தொடங்கப்பட்ட தேசியளவிலான பிரசாரமொன்றின் பாகமாக இந்நிகழ்வு இடம்பெறுகின்றது. 

இதனையொத்த ஊக்குவிப்பு நிகழ்வுகள் அம்பாந்தோட்டை, நுவரெலியா, தம்புள்ளை மற்றும் குருநாகல் ஆகிய பிராந்தியங்களில் வெற்றிகரமாக இடம்பெற்று பரந்தளவிலான விழிப்புணர்வை தோற்றுவித்ததுடன் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் சௌகரியத்தையும் நன்மைகளையும் அனுபவிப்பதற்கு வியாபாரங்களையும் பொதுமக்களையும் இயலச்செய்தது.

இந்நிகழ்வில், பரந்த வகையிலான டிஜிட்டல் கொடுப்பனவு சேவைகளுக்குப் பதிவுசெய்துகொள்வதற்கும் செயல்திறன்மிக்கவாறு பயன்படுத்துவதற்கும் பொதுமக்கள் வங்கிகள், நிதிக் கம்பனிகள் மற்றும் இலத்திரனியல் பணச் சேவை வழங்குநர்கள் அதேபோன்று LANKAQR மற்றும் இலங்கையில் வேறு வங்கிகளுக்கிடையிலான டிஜிட்டல் கொடுப்பனவு முறைமைகளைத் தொழிற்படுத்துகின்ற லங்காபே (பிறைவட்) லிமிடெட் என்பன உள்ளடங்கலாக நிதியியல் நிறுவனங்களிடமிருந்து தனிப்பட்ட தேவைக்கேற்றவாறான உதவியினைப் பெற்றுக்கொள்வதற்கு இயலுமாகவிருப்பர். 

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் வசதியை நடைமுறை ரீதியாக அனுபவிப்பதற்கு சமூகமளிப்பவர்கள் நிகழ்வு இடம்பெறும் வளாகத்தினுள் அமையப்பெற்றுள்ள வணிகர் விற்பனைக் கூடங்களிலிருந்து பல வகையான பொருட்கள் மற்றும் சேவைகளை கழிவு செய்யப்பட்ட விலைகளில் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பையும் பெற்றுக்கொள்வர்.

மேலும், LANKAQR கொடுப்பனவு ஏற்றுக்கொள்ளல் வசதியினைப் பெற்றுக்கொள்வதற்கு வியாபார நிறுவனங்களுக்காக திருகோணமலை நகர் பிரதேசத்தில் நிதியியல் நிறுவனங்கள் வணிகர் ஈடுபாட்டு முயற்சியொன்றையும் நடாத்தும். 

நிதியியல் நிறுவனங்களால் வழங்கப்படும் வழிகாட்டுதல் மற்றும் தனிப்பட்ட தேவைக்கேற்றவாறான உதவி என்பவற்றுடன் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் வசதி பற்றிய தமது விழிப்புணர்வையும் அனுபவத்தையும் அதிகரிப்பதற்கு இவ்வாய்ப்பின் அனுகூலத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு திருகோணமலை பொதுமக்கள் மற்றும் வர்த்தக சமூகத்திற்கு இலங்கை மத்திய வங்கி அழைப்பு விடுத்துள்ளது.

Related

Tags: CBSLcentral bankநந்தலால் வீரசிங்கமத்திய வங்கி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடந்த ஒரு மாதத்தில் 360-க்கும் மேற்பட்ட இணையவழி நிதி மோசடி சம்பவங்கள்!

Next Post

மாதம்பிட்டிய மயானத்திலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

Related Posts

மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!
இலங்கை

மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!

2026-10-17
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!
இலங்கை

பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

2026-10-17
திடீர் மின்தடை தொடர்பில் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவிப்பு!
இலங்கை

திடீர் மின்தடை தொடர்பில் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவிப்பு!

2026-10-17
நாடு முழுவதும் மின் தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகுகள் முடக்கம்!
இலங்கை

நாடு முழுவதும் மின் தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகுகள் முடக்கம்!

2026-10-17
சாவுப்பாடலைச் சரித்திரமாக்கிய தேவா! – நடராஜா குருபரன்.
ஆசிரியர் தெரிவு

சாவுப்பாடலைச் சரித்திரமாக்கிய தேவா! – நடராஜா குருபரன்.

2026-10-17
சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!
இலங்கை

673,000 சாரதி அனுமதி பத்திரங்கள் அச்சிடும் பணிகள் நிறுத்தம்!

2026-10-17
Next Post
மாதம்பிட்டிய மயானத்திலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

மாதம்பிட்டிய மயானத்திலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டை; வளைகுடாவில் மீண்டும் பதட்டம்!

பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டை; வளைகுடாவில் மீண்டும் பதட்டம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!

மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!

0
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

0
திடீர் மின்தடை தொடர்பில் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவிப்பு!

திடீர் மின்தடை தொடர்பில் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவிப்பு!

0
நாடு முழுவதும் மின் தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகுகள் முடக்கம்!

நாடு முழுவதும் மின் தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகுகள் முடக்கம்!

0
இளைஞர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை ஊக்குவிக்க பிரித்தானியா திட்டம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: