18 வயதான ஹென்றி நோவாக்கின் (Henry Nowak) கொலையைத் தொடர்ந்து சவுத்தாம்ப்டனில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீதிமன்ற வழக்கு முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஹாம்ப்ஷயர் (Hampshire) துறைமுக நகரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட கலவரங்களுக்குப் பின்னர், அரசுத் தரப்பு வழக்கறிஞர் சேவை இந்தக் குற்றச்சாட்டுகளை அறிவித்தது.
இந்தக் கலவரங்களில் 11 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்ததுடன் ஒரு காவல் நாயும் காயங்களுக்கு உள்ளானது.
இந்த நிலையில் 50 வயதான மாட் ஸ்டைலர் (Matt Styler) என்பவர் மீது காவல்துறை அதிகாரியைத் தாக்கியதாகவும் , 44 வயதான டேனியல் ஃப்ராஸ்ட் (Daniel Frost) என்பவர் மீது வன்முறைக் கலவரம் மற்றும் தாக்குதல் ஆயுதத்தை வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை இன்று சவுத்தாம்ப்டன் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் ஹாம்ப்ஷயர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஹென்றி நோவாக்கின் கொலை வழக்கில் 23 வயதான விக்ரம் திக்வாவுக்கு குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் வகையில், திங்களன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.















