இலங்கை கடற்படையினர், 2026 மே 16 முதல் 31 வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாற்பத்து நான்கு (44) நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எட்டு (08) டிங்கி படகுகள், இரண்டு (02) கெனோக்கள் மற்றும் நான்கு (04) டிராக்டர்களையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
அதன்படி, திருகோணமலை பனிச்சங்கேனி, சோபா தீவு, பொல்மல்குடா, கின்னியா, சூடைக்குடா, ஒட்டமாவடி, ஆலம்பில், புதுவக்காடு மற்றும் யாழ்ப்பாணம் சுண்டிகுளம் ஆகிய கடலோர மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கிய இந்த நடவடிக்கைகள் மூலம் கிழக்கு மற்றும் வடக்கு கடற்படை கட்டளைகளால் நாற்பத்து நான்கு (44) நபர்கள் கைது செய்ப்பட்டனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கடல் அட்டைகள், வணிக வெடிபொருட்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், டிராக்டர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மட்டக்களப்பு, கொட்பே, மூதூர், வாழைச்சேனை, குச்சவெளி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்கள அலுவலகங்களிலும், புல்மோட்டை பொலிஸ் நிலையத்திலும் ஒப்படைக்கப்பட்டனர்.













