அம்பத்தலையிலிருந்து கொலன்னாவாவிற்கு நீரைக் கொண்டு செல்லும் பிரதானக் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பைத் தொடர்ந்து பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தகவலின்படி, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, நாவல, ஒபேசகரபுர மற்றும் கொலன்னாவை மாநகர சபை பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.
சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், சேவைகள் மீண்டும் தொடங்கும் வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நுகர்வோர் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












