தம்புள்ளையில் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிக்கு எதிராக நடைபெற்ற முத்தரப்புத் தொடரின் இரண்டாவது போட்டியில் பிரப்சிம்ரன் சிங், திலக் வர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரின் அரைசதங்கள் இந்தியா ‘ஏ’ அணியானது ஒன்பது விக்கெட் இழப்புக்கு 349 ஓட்டங்களை குவித்தது.
பிரப்சிம்ரன் வெறும் 69 பந்துகளில் 84 ஓட்டங்களை எடுத்து அணியை முன்னின்று வழிநடத்தினார்.
அதே நேரத்தில் திலக் மற்றும் கெய்க்வாட் தலா 66 ஓட்டங்களை எடுத்தனர்.
வைபவ் சூர்யவன்ஷி 22 பந்துகளில் 44 ஓட்டங்கள் எடுத்து, ஒன்பது பவுண்டரிகளை விளாசி இந்தியா ‘ஏ’ அணிக்கு ஒரு அதிரடியான தொடக்கத்தை அளித்தார்.
பின்னர் சூர்யான்ஷ் ஷெட்ஜ் 40 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.
தம்புள்ளையில் மழை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டதால், போட்டி இரு அணிகளுக்கும் தலா 49 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
350 என்ற இலக்கினை நோக்கி ஆப்கானிஸ்தான் ஏ அணி துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.
















