• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புதிய சம்பள உயர்வை அடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்ட மருத்துவ வேலைநிறுத்தம்!

கொழும்பு காலி முகத்திடலில் புதிய வரலாறு: 4988 கலைஞர்களின் சலங்கை ஒலியோடு கின்னஸ் சாதனை படைத்தது “சங்கமம் 2026”!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/14
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை கலை வரலாற்றில் என்றும் அழியாத ஒரு பொன்னெழுத்துப்பொதிந்த நாளாக இன்றைய நாள் மாறியுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் அயராத முயற்சியினாலும், வழிகாட்டலாலும் ஏற்பாடு செய்யப்பட்ட “சங்கமம் 2026” பரதநாட்டியப் பெருவிழா, கொழும்பு காலி முகத்திடலில் கின்னஸ் உலக சாதனையை வெற்றிகரமாகப் படைத்துள்ளது.

இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற ‘அயலக தமிழர் மாநாட்டில்’ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த வேண்டுகோளுக்கமைய, இந்தியாவின் சங்கமம் குளோபல் அகாடமி மற்றும் இலங்கைக்கான சங்கமம் லியா ஹோலிடேஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, K. தினேஷ் குமார் அவர்களின் நெறியாள்கையில் இந்த பிரம்மாண்ட நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் இத்துறையில் படைக்கப்பட்ட உலக சாதனையானது வெறும் 416 கலைஞர்களின் பங்கேற்புடன் மட்டுமே அமைந்திருந்த நிலையில், இன்று காலை அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஒட்டுமொத்தமாக 4,988 பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே மேடையில் பங்கேற்று, முந்தைய சாதனையை மிக பிரம்மாண்டமான முறையில் முறியடித்து புதிய உலக சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.

இன்று காலை காலி முகத்திடலில் இயற்கை அலைகளின் ஓசையையும் மிஞ்சும் வகையில், இந்த 4,988 கலைஞர்களின் கால்களில் கட்டப்பட்டிருந்த 9976 சலங்கைகள் ஒரே தாளத்தில், ஒரே நேர்த்தியில் ஒலித்து உலகையே வியப்பில் ஆழ்த்தின.

தமிழ் கலாசாரத்தின் தொன்மையையும், பரதநாட்டியத்தின் நுணுக்கங்களையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் இந்நிகழ்வு மிக நேர்த்தியாக அமைந்திருந்தது.

இந்நிகழ்வின் நடுவராக ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) வருகை தந்திருந்த கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் நடுவர் . ரிஷி நாத் (Guinness World Records Adjudicator Mr. Rishi Nath) அவர்கள் கலந்துகொண்டு, இந்த சாதனையை நேரில் ஆய்வு செய்து இதற்கான உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவித்தார்.

“நீங்கள் அனைவரும் இப்போது அதிகாரப்பூர்வமாக வியக்கத்தக்க சாதனையாளர்கள்” என்று பாராட்டிய அவர், புதிய உலக சாதனைக்கான சான்றிதழை நிகழ்வின் பிரதம அதிதியான பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களிடம் மேடையில் வைத்து கையளித்தார்.

சான்றிதழைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர், இலங்கை மண்ணில் தமிழ் பாரம்பரியக் கலையின் பெருமையை உலக அரங்கிற்கு கொண்டு சேர்த்துள்ள இத்தருணம், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின் போது ஊடகங்களுக்கு விசேட கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தமிழர்களுடைய கலை, கலாசாரம் மற்றும் பண்பாட்டை உலகறியச் செய்யும் நோக்குடனேயே இந்த உலக சாதனை நிகழ்வு இன்றைய தினம் கொழும்பு காலி முகத்திடலில் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பல சாதனைகளைத் தொடர்ந்து நிகழ்த்தி வரும் இலங்கை அரசாங்கத்தின் மற்றுமொரு முக்கிய அங்கமாக இந்த கின்னஸ் சாதனை நிகழ்வு அமைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இத்தகைய சர்வதேச அளவிலான பிரம்மாண்ட நிகழ்வுகளின் மூலம் உலக மக்கள் அனைவரது கவனமும் இலங்கையை நோக்கித் திரும்பும் என்றும் சுட்டிகாட்டினார்.

இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் சர்வதேசப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவது கணிசமாக அதிகரித்து, நாட்டின் சுற்றுலாத்துறை மேலும் மேலும் வளர்ச்சியடைவதோடு, இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாயை அதிகரித்துக்கொள்ளவும் இது ஒரு பெரும் ஏதுவாக அமையும் என நாம் திடமாக நம்புகிறோம் என்றும் அவர் விவரித்தார்.

அத்தோடு, இலங்கை மாணவர்களின் திறமைகளை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்வதற்கான உன்னதமான வாய்ப்பாக இது அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், இன்றைய வரலாற்றுச் சிறப்புமிக்க கின்னஸ் சாதனையில் பங்கேற்று நாட்டின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய அனைத்துச் சிறார்களுக்கும், மாணவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த அபூர்வ கலைக் காட்சியை நேரில் கண்டு ரசிப்பதற்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காலி முகத்திடலில் திரண்டிருந்தனர். இலங்கையில் இத்தகையதொரு பிரம்மாண்ட கலாசாரப் புரட்சியை சாத்தியமாக்கிய பிரதி அமைச்சருக்கு, நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இவ்விழாவில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களுடன் இணைந்து, கடற்றொழில் மற்றும் நீர்வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் சர்வதேச கலைத்துறை வித்தகர்கள் பலரும் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சலங்கை ஒலியால் அதிர்ந்த கொழும்பு காலி முகத்திடல் கடற்கரை, இலங்கைத் தமிழர்களின் கலைத்திறனுக்கும், கலாசார ஒற்றுமைக்கும் என்றும் அழியாத ஒரு சான்றாக உலக வரலாற்றில் பதிவாகியுள்ளது.

blank blank blank

Related

Tags: sangamamsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் மீட்பு- பொலிஸார் தீவிர விசாரணை!

Next Post

“சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசமடைகிறது” உடனடியாகக் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு ‘சர்வஜன அதிகாரம்’ அவசரக் கடிதம்!

Related Posts

“சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசமடைகிறது” உடனடியாகக் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு ‘சர்வஜன அதிகாரம்’ அவசரக் கடிதம்!
இலங்கை

2026-06-14
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!
இலங்கை

உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் மீட்பு- பொலிஸார் தீவிர விசாரணை!

2026-06-14
குட்டிக்குட்டி சட்ட வெற்றிகளுக்கு  உரிமை கொண்டாடுவது?

அபுதாபியில் இருந்து இரு முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டு கைது!

36 ஆண்டுகால ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நாளை பாரிய போராட்டம்: மயிலிட்டி மக்களுக்கு ‘காணி உரிமை இயக்கம்’ பூரண ஆதரவு!

குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்
அம்பாறை

குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

2026-06-13
Next Post
“சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசமடைகிறது” உடனடியாகக் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு ‘சர்வஜன அதிகாரம்’ அவசரக் கடிதம்!

"சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசமடைகிறது" உடனடியாகக் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு 'சர்வஜன அதிகாரம்' அவசரக் கடிதம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
“சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசமடைகிறது” உடனடியாகக் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு ‘சர்வஜன அதிகாரம்’ அவசரக் கடிதம்!

“சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசமடைகிறது” உடனடியாகக் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு ‘சர்வஜன அதிகாரம்’ அவசரக் கடிதம்!

0
புதிய சம்பள உயர்வை அடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்ட மருத்துவ வேலைநிறுத்தம்!

கொழும்பு காலி முகத்திடலில் புதிய வரலாறு: 4988 கலைஞர்களின் சலங்கை ஒலியோடு கின்னஸ் சாதனை படைத்தது “சங்கமம் 2026”!

0
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் மீட்பு- பொலிஸார் தீவிர விசாரணை!

0
அபுதாபியில் இருந்து இரு முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டு கைது!

அபுதாபியில் இருந்து இரு முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டு கைது!

0
குட்டிக்குட்டி சட்ட வெற்றிகளுக்கு  உரிமை கொண்டாடுவது?

குட்டிக்குட்டி சட்ட வெற்றிகளுக்கு  உரிமை கொண்டாடுவது?

0
“சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசமடைகிறது” உடனடியாகக் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு ‘சர்வஜன அதிகாரம்’ அவசரக் கடிதம்!

“சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசமடைகிறது” உடனடியாகக் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு ‘சர்வஜன அதிகாரம்’ அவசரக் கடிதம்!

2026-06-14
புதிய சம்பள உயர்வை அடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்ட மருத்துவ வேலைநிறுத்தம்!

கொழும்பு காலி முகத்திடலில் புதிய வரலாறு: 4988 கலைஞர்களின் சலங்கை ஒலியோடு கின்னஸ் சாதனை படைத்தது “சங்கமம் 2026”!

2026-06-14
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் மீட்பு- பொலிஸார் தீவிர விசாரணை!

2026-06-14
குட்டிக்குட்டி சட்ட வெற்றிகளுக்கு  உரிமை கொண்டாடுவது?

குட்டிக்குட்டி சட்ட வெற்றிகளுக்கு  உரிமை கொண்டாடுவது?

2026-06-14
அபுதாபியில் இருந்து இரு முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டு கைது!

அபுதாபியில் இருந்து இரு முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டு கைது!

2026-06-14

Recent News

“சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசமடைகிறது” உடனடியாகக் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு ‘சர்வஜன அதிகாரம்’ அவசரக் கடிதம்!

“சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசமடைகிறது” உடனடியாகக் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு ‘சர்வஜன அதிகாரம்’ அவசரக் கடிதம்!

2026-06-14
புதிய சம்பள உயர்வை அடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்ட மருத்துவ வேலைநிறுத்தம்!

கொழும்பு காலி முகத்திடலில் புதிய வரலாறு: 4988 கலைஞர்களின் சலங்கை ஒலியோடு கின்னஸ் சாதனை படைத்தது “சங்கமம் 2026”!

2026-06-14
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் மீட்பு- பொலிஸார் தீவிர விசாரணை!

2026-06-14
குட்டிக்குட்டி சட்ட வெற்றிகளுக்கு  உரிமை கொண்டாடுவது?

குட்டிக்குட்டி சட்ட வெற்றிகளுக்கு  உரிமை கொண்டாடுவது?

2026-06-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.