அமெரிக்கா- ஈரான் இடையே இறுதி செய்யப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் ஜூன் 19ம் திகதி கையெழுத்தாக உள்ளது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் கடுமையான பொருளாதாரச் சீர்குலைவை ஏற்படுத்தியதும், பல நாடுகளில் உயிரிழப்புகளுக்குக் காரணமானதுமான மேற்கு ஆசியப் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தை தான் வரவேற்பதாக சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
இந்தப் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தப்படுவது அப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்தை உறுதி செய்யவும் உதவும் என்று இந்தியா நம்புவதக்கவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தி ஒரு நிலையான இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

















