ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம் சுமத்தியுள்ள ஈரான், ஹோர்முஸ் நீரிணை அனைத்துக் கப்பல்களுக்கும் மூடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை அணுகினால் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என அனைத்து கப்பல்களுக்கும் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனானில் தொடரும் இஸ்ரேலியத் தாக்குதல்களே இந்த நடவடிக்கைக்குக் காரணம் என ஈரான் தெரிவித்துள்ளது.
உலகின் முக்கிய எண்ணெய் கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக உலகின் சுமார் 20 வீத எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது.
இதனால், நீரிணை மீண்டும் மூடப்பட்டிருப்பது உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிசக்தி சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை ஹோர்முஸ் நீரிணைமுழுமையாகத் திறந்தே உள்ளது என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் (JD Vance )தெரிவித்துள்ளார்.
















