• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வவுனியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மாணவர்கள் பேரணி: மோட்டார் சைக்கிள் பறிமுதல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/23
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம், வவுனியா
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

வவுனியா நகரில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களால் நடத்தப்பட்ட அனுமதியற்ற வாகனப் பேரணி ஒன்றின் போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை மாணவர்களால் வவுனியா புகையிரத நிலைய வீதியில் பெரும் எண்ணிக்கையிலான மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களுடன் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மாணவர்கள் கூட்டமாக வீதியை மறித்து, ஏனைய வாகனங்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் போக்குவரத்து இடையூறை ஏற்படுத்தும் வகையில் பயணித்துள்ளனர்.

அத்துடன், அதிவேக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களில் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய வகையில் ‘சைலன்சர்கள்’ பொருத்தப்பட்டிருந்ததோடு, வீதியில் ஆபத்தான முறையில் அதிவேகமாகவும் அவர்கள் வாகனங்களை செலுத்தியுள்ளனர்.

இது குறித்துக் கிடைத்த தகவலையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குறித்த பேரணியை வழிமறித்தனர்.

இதன்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் போக்குவரத்து இடையூறு விளைவித்தல் (பொது வீதியில் ஏனைய வாகனங்கள் பயணிக்க முடியாதவாறு இடையூறு ஏற்படுத்தியமை), சட்டவிரோத மாற்றம் (வாகனங்களின் அசல் வடிவமைப்பு அனுமதியின்றி மாற்றியமைத்தமை ), ஒலி மாசு ஏற்படுத்தல் (மோட்டார் சைக்கிள்களின் ஒலி அமைப்பை மாற்றி அதிக சத்தத்தை எழுப்பியமை), வேகமாக பயணித்தமை (பொது வீதியில் ஆபத்தான முறையில் வாகனங்களைச் செலுத்தியமை) தொடர்பிலான சட்டங்களின் கீழ் மாணவர்களுக்கு எதிராக பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த சோதனையின் போது, விதிமுறைகளை அப்பட்டமாக மீறிய குற்றச்சாட்டில் ஒரு மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு, வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய பல மாணவர்களுக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக வவுனியா போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக பொலிஸார் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மாணவர்கள் இவ்வாறான கொண்டாட்டங்களின் போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதையும், வீதிப் பாதுகாப்புச் சட்டங்களை மீறுவதையும் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த பாடசாலையில் இம்முறை பரீட்சைக்கு தோற்றும் உயர்தர மாணவர்களின் ஒன்று கூடல் இடம்பெற்ற நிலையிலேயே இச சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: srilanka newsVavuniya
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனையை உறுதிபடுத்திய கொழும்பு மேல் நீதிமன்றம்!

Next Post

யாழ் நீதிமன்ற சட்டத்தரணிகளை சந்தித்தார் நீதி அமைச்சர்!

Related Posts

யாழ் நீதிமன்ற சட்டத்தரணிகளை சந்தித்தார் நீதி அமைச்சர்!
இலங்கை

2026-06-23

யாழில் இராணுவ வீரருக்கு வீடு கட்டிகொடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!
இலங்கை

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
வைரலாகும் மெஸ்ஸியின் 100 வயது தீவிர ரசிகை!
பல்சுவை

வைரலாகும் மெஸ்ஸியின் 100 வயது தீவிர ரசிகை!

2026-06-23
மொரகஹஹேனவில் வங்கிக்குள் புகுந்து கொள்ளை!
இலங்கை

மொரகஹஹேனவில் வங்கிக்குள் புகுந்து கொள்ளை!

2026-06-23
Next Post
யாழ் நீதிமன்ற சட்டத்தரணிகளை சந்தித்தார் நீதி அமைச்சர்!

யாழ் நீதிமன்ற சட்டத்தரணிகளை சந்தித்தார் நீதி அமைச்சர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
யாழ் நீதிமன்ற சட்டத்தரணிகளை சந்தித்தார் நீதி அமைச்சர்!

யாழ் நீதிமன்ற சட்டத்தரணிகளை சந்தித்தார் நீதி அமைச்சர்!

0
வவுனியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மாணவர்கள் பேரணி: மோட்டார் சைக்கிள் பறிமுதல்!

வவுனியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மாணவர்கள் பேரணி: மோட்டார் சைக்கிள் பறிமுதல்!

0
ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனையை உறுதிபடுத்திய கொழும்பு மேல் நீதிமன்றம்!

ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனையை உறுதிபடுத்திய கொழும்பு மேல் நீதிமன்றம்!

0
யாழில் இராணுவ வீரருக்கு வீடு கட்டிகொடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

யாழில் இராணுவ வீரருக்கு வீடு கட்டிகொடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

0
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

0
யாழ் நீதிமன்ற சட்டத்தரணிகளை சந்தித்தார் நீதி அமைச்சர்!

யாழ் நீதிமன்ற சட்டத்தரணிகளை சந்தித்தார் நீதி அமைச்சர்!

2026-06-23
வவுனியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மாணவர்கள் பேரணி: மோட்டார் சைக்கிள் பறிமுதல்!

வவுனியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மாணவர்கள் பேரணி: மோட்டார் சைக்கிள் பறிமுதல்!

2026-06-23
ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனையை உறுதிபடுத்திய கொழும்பு மேல் நீதிமன்றம்!

ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனையை உறுதிபடுத்திய கொழும்பு மேல் நீதிமன்றம்!

2026-06-23
யாழில் இராணுவ வீரருக்கு வீடு கட்டிகொடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

யாழில் இராணுவ வீரருக்கு வீடு கட்டிகொடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23

Recent News

யாழ் நீதிமன்ற சட்டத்தரணிகளை சந்தித்தார் நீதி அமைச்சர்!

யாழ் நீதிமன்ற சட்டத்தரணிகளை சந்தித்தார் நீதி அமைச்சர்!

2026-06-23
வவுனியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மாணவர்கள் பேரணி: மோட்டார் சைக்கிள் பறிமுதல்!

வவுனியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மாணவர்கள் பேரணி: மோட்டார் சைக்கிள் பறிமுதல்!

2026-06-23
ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனையை உறுதிபடுத்திய கொழும்பு மேல் நீதிமன்றம்!

ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனையை உறுதிபடுத்திய கொழும்பு மேல் நீதிமன்றம்!

2026-06-23
யாழில் இராணுவ வீரருக்கு வீடு கட்டிகொடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

யாழில் இராணுவ வீரருக்கு வீடு கட்டிகொடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

2026-06-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.