முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஷ்வர பண்டார, இன்று (08) சிறைச்சாலை அதிககாரிகளால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் இன்று (08) அவரை சிறைச்சாலை பேருந்து மூலம் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
இரண்டு அரச நிறுவனங்களிடம் இருந்து சம்பளம்பெற்ற விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கடந்த 18ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.















