வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலன்னாவ பகுதியில் நேற்று (08) ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் ஜயவர்தனபுர முகாம் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
120 கிராம் 710 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 112 கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 31 வயதுடைய, கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த ஒருவராவார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











