நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் யாழ் மாநகர சபையினால் முன்னேற்பாட்டு கூட்டம் நேற்றையதினம் நடத்தப்பட்டது.
யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று மதியம் இடம்பெற்றது.
யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, யாழ் மாநகர பிரதி முதல்வர் இம்மானுவேல் தயாளன்,
யாழ் மாநகர சபை ஆணையாளர் அரவிந்தராஜ் ஆகியோரின் தலைமையில் குறித்த கலந்துரையாடல்
நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் நல்லூர் கந்தசுவாமி ஆலய பிரதிநிதிகள், யாழ் மாநகர சபை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.











