யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுட்டிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வடமராட்சி பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சின்னராசா துளசிகரன் எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொடிகாமம் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது மின் கம்பத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாககும் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு அதி தீவிர சீக்கிச்சை பிரிவில் ஆனந்திக்கப்பட்டு சிகிக்சை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பருத்தித்துறை ஆதார வைத்தியாசலையில் மரணமடைந்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உரிய விசாரணைகள் நடைபெற்ற பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.











