கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து, ‘ஐஸ்’ என்று பொதுவாக அழைக்கப்படும் 463 கிலோ கிராம் சந்தேகத்திற்குரிய கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களில் இருவர் பாகிஸ்தான் நாட்டவர்கள் ஆவர்.
கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CCIB) அதிகாரிகளால் அந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பெருமளவிலான சரக்குத் தொகுதி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.













