திருகோணமலை கடற்கரைப் பகுதியில் புத்தர் சிலையை அனுமதியின்றி நிறுவியதாகக் கூறப்படும் வழக்கு மற்றும் அது தொடர்பான பிற குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் போது, முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக, பாலங்கொட கஸ்ஸப தேரர் இன்று (16) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதையடுத்து அவரை நாளை (17) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நவம்பர் 11 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக, திருகோணமலை நீதவான் நீதிமன்றம் குறித்த தேரருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.














