• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி

மக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி

Litharsan by Litharsan
2021/05/05
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
88 0
A A
0
39
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்கள் தமக்கு வழங்கியுள்ள ஆதரவு புத்தெழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி இரண்டு பிரதான கட்சிகளுக்கு அடுத்து முப்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று மூன்றாவது கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், கூட்டணி இன்றித் தனித்துவமான கொள்கைகளை முன்வைத்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி படித்த இளைஞர்கள், எளிய பெண்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலை மிகவும் எழுச்சிகரமாகச் சந்தித்தபோது தமக்குக் கிடைத்த ஆதரவைப் பார்க்கும்போது மக்கள் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற புத்தெழுச்சியை வழங்கியிருப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து நின்று 30 இலட்சத்திற்கும் மேலான மக்களின் வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் தமிழர் நிலத்தின் தனித்துவமானதும் மாபெரும் அரசியல் அமைப்பாகவும் மாறியிருப்பது வரலாற்றுச் சிறப்புடைய செய்தியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில், மிகப்பெரிய கட்சிகளாகக் கருதப்படுகின்ற அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய கட்சிகளே தனித்துப் போட்டியிட முன்வருவதில்லை.

இந்த சூழலில், நாம் தமிழர் கட்சி எவ்வித சமரசமும் இன்றி தனித்தே களம் கண்டுவருகின்றது.

இதன்படி, 2016 சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அக்கட்சி, 4.59 இலட்சம் வாக்குகளைப் பெற்று தேர்தலில் பதிவான வாக்குகளில் 1.06 வீத மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தது.

இதற்கடுத்து, அடுத்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 16.64 இலட்சம் வாக்குகளைப் பெற்றநிலையில் மக்கள் ஆதரவு 3.98 வீதமாக அதிகரித்தது.

இதைத் தொடர்ந்து, நடந்துமுடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. மற்றும் மக்கள் நீதி மய்யம் என நான்கு கூட்டணிகளுக்கு மத்தியில் நாம் தமிழர் கட்சி தனித்துக் களமிறங்கியது.

யாரும் எதிர்பாராத அளவில் மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளைப் பெற்று, மொத்தமாக 30 இலட்சத்து 43ஆயிரத்து 657 வாக்குகளைப் பெற்று மாநிலத்தில், மூன்றாவது பெரிய கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்துள்ளது.

இதேவேளை, சென்னை, திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட நிலையில் அவர், 48ஆயிரத்து, 597 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

அத்துடன், அவரது கட்சியின் வேட்பாளர்கள், ஆவடி, சோழிங்கநல்லுார் மற்றும் தூத்துக்குடி தொகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் 18 தொகுதிகளில் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளையும் 106 தொகுதிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அந்தவகையில், நாம் தமிழர் கட்சி 172 தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

எனவே, கட்சியை மக்கள் மயப்படுத்தும் முறையான கட்டமைப்பை அடுத்த ஐந்து வருடங்களில் ஏற்படுத்தினால், நாம் தமிழர் கட்சி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வரலாந்நு வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: Naam Thamizhar KatchiSeemanTamilnaduசீமான்தமிழ்நாடுதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்நாம் தமிழர் கட்சி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது!

Next Post

நாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

Related Posts

பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையின் வாயிலில் கைதிகள் முற்றுகை
இலங்கை

பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையின் வாயிலில் கைதிகள் முற்றுகை

2026-08-07
பல்லன்சேன சிறைச்சாலையில் திடீர் அமைதியின்மை…
இலங்கை

பல்லன்சேன சிறைச்சாலையில் திடீர் அமைதியின்மை…

2026-08-07
இலங்கை

புதிய மெகசின் சிறைச்சாலை அமைதியின்மை-ஒருவர் உயிரிழப்பு

2026-08-07
சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை

சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2026-08-06
பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு  FACEBOOK  தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!
இந்தியா

பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு FACEBOOK தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!

2026-08-06
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இதுவரை 499 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

2026-08-06
Next Post
நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவ்ஷீல்ட் தடுப்பூசி!

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்களுக்கு வழங்கும் திட்டம் ஆரம்பம்!

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பயணக்கட்டுப்பாடு – அரசாங்கம்

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்

0
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், 508 பேர் கைது

0
மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

0
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.