• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கடாஃபியின் மகனுக்கு தடை!

Anoj by Anoj
2021/11/26
in உலகம்
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கடாஃபியின் மகன் சயீஃப் அல்-இஸ்லாமுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

கடாஃபியின் ஆட்சிக் காலத்தின்போது அரசுக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறையை ஏவிவிட்ட குற்றத்துக்காக திரிபோலி நீதிமன்றம் சயீஃபுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

மேலும், அவர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. இந்தச் சூழலில், அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தத் தடையை எதிர்த்து சயீஃப் அல்-இஸ்லாம் மேல்முறையீடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு 60 வேட்புமனுக்கள் தாக்கலாகியுள்ளன. பெண் உரிமைப்போராளியான லீலாபென் கலிபா (வயது 46) மட்டும்தான் பெண் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று வலிமை வாய்ந்த தலைவராக அங்கு கருதப் படுகிற கல்பா ஹப்தாரின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அவர் அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர் கொள்வதால் அவரது வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. லிபியா இராணுவ சட்டத் தரணிகள்தான் இவர்கள் இருவரது வேட்புமனுக்களையும் நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லிபியாவில் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் 24ஆம் திகதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஜனவரி 24ஆம் திகதியும் நடைபெற உள்ளது. அங்கு தற்போது முகமது அல் மெனிபி என்பவர் ஜனாதிபதியாக உள்ளார்.

லிபியாவின் ஜனாதிபதியாக 1969ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை பதவி வகித்தவர் முஅம்மர் அல் கடாபி.

40 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கடாஃபியின் ஆட்சி, கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி முடிவுக்கு வந்தது. அவர் கிளர்ச்சிப்படையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு, உடனடியாக சுட்டுக்கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்களால் சயீஃப் அல்-இஸ்லாம் கைது செய்யப்பட்டார்.

பின்னர் தொடங்கிய உள்நாட்டுப் போரில் கடாஃபி கொல்லப்பட்டார். சயீஃபை கைது செய்து வைத்திருந்த அபுபக்கர் அல்-சித்திக் என்ற அமைப்பினர் அவரை 2017ஆம் ஆண்டு விடுவித்தனர்.

Related

Tags: சயீஃப் அல்-இஸ்லாம்தேர்தல் ஆணையம்முன்னாள் ஜனாதிபதி கடாஃபிலிபிய ஜனாதிபதி தேர்தல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

துப்பாக்கிச்சூட்டில் நிழல் உலக தாதா உயிரிழப்பு – இரு பொலிஸாருக்கு காயம்!

Next Post

கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

Related Posts

ஏலத்தில் சாதனை படைத்த பீலேயின் டி-சேர்ட்: ரூ. 47 கோடிக்கு மேல் ஏலம் போனது!
உலகம்

2026-07-18
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இங்கிலாந்து

சொத்தை பாதுகாப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி

2026-07-18
அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!
அமொிக்கா

பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்
இங்கிலாந்து

பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

2026-07-18
விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை
இங்கிலாந்து

விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை

2026-07-18
ஈரானின் ஏவுகணை தாக்குதல் முயற்சி: ஜோர்டான் வான்வெளியில் 10 ஏவுகணைகள் இடைமறிப்பு
உலகம்

ஈரானின் ஏவுகணை தாக்குதல் முயற்சி: ஜோர்டான் வான்வெளியில் 10 ஏவுகணைகள் இடைமறிப்பு

2026-07-18
Next Post
கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் 5 ஆவது இலக்கிய விழா!

நாட்டில் சில மாவட்டங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்!

கொரோனா அச்சுறுத்தல்: பருத்தித்துறை நகரசபை தவிசாளர் உட்பட 17 பேர் தனிமைப்படுத்தலில்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
நுளம்புகள் பெருகும் வகையில் இடங்களைப் பராமரித்த 4,672 நபர்கள் மீது சட்ட நடவடிக்கை!

கிளிநொச்சி பரந்தனில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீட்டுக்கு இன்று அடிக்கல் நாட்டி வைப்பு!

சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வேண்டாம் – விக்டோரியன்ஸ் போராட்டம்!

உலக சாரணர் இயக்கத்தின் (WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

நவீன முறையில் புனரமைக்கப்பட்ட மாடு அறுக்கும் மடுவம் திறந்து வைப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.