காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 11ஆவது நாளாகவும் தொடர்கிறது.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.
அத்தோடு, குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றனர்.
ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.















