• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் பொலார்ட்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் பொலார்ட்!

Anoj by Anoj
2022/04/21
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட சகலதுறை வீரரான கெய்ரன் பொலார்ட், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் அணியின் தலைவரான பொலார்ட், தனது ஓய்வுக் குறித்து வெளியிட்டுள்ள செய்தியில்,

‘கவனமான ஆலோசனைக்குப் பிறகு, நான் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தேன். பல இளைஞர்களைப் போலவே, நான் 10 வயது சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே மேற்கிந்திய தீவுகள் அணியை பிரதிநிதித்துவப்படுத்துவது எனது கனவாக இருந்தது. மேலும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டை இரண்டிலும் (ஒருநாள் மற்றும் ரி-20) பிரதிநிதித்துவப்படுத்தியதில் பெருமைப்படுகிறேன்.

2007ஆம் ஆண்டு எனது குழந்தைப் பருவ ஹீரோ பிரையன் லாராவின் தலைமையில் நான் சர்வதேச அரங்கில் அறிமுகமானதை நான் இன்னும் தெளிவாக நினைவுகூருகிறேன். அந்த மெரூன் நிறங்களை அணிந்துகொண்டு, அத்தகைய ஜாம்பவான்களுடன் இணைந்து விளையாடுவது எனக்கு கிடைத்த ஒரு பாக்கியம்’ என குறிப்பிட்டுள்ளார்.

‘கடந்த பதினைந்து ஆண்டுகளாக மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் மற்றும் ரி-20 அணிகளுக்கு கீய்ரன் பொல்லார்ட் செய்த சிறந்த சேவைக்காக மேற்கிந்திய தீவுகள கிரிக்கெட் சபையில் உள்ள அனைவரின் சார்பாகவும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என மேற்கிந்திய தீவுகள கிரிக்கெட் சபையின் தலைவர் ரிக்கி ஸ்கெரிட் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 35 வயதாகும் பொல்லார்ட், 2007ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் அறிமுகமானதில் இருந்து இதுவரை 123 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 26.01 சராசரியில் 2706 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் மூன்று சதங்கள் 13 அரைசதங்கள் அடங்கும். அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கை 119 ஆகும்.

மேலும், 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த பந்துவீச்சாகும்.

2008ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய அணிக்கெதிரான ரி-20 போட்டியில் அறிமுகமான பொலார்ட், இதுவரை 101 ரி-20 போட்டிகளில், 135.14 ஸ்டிரைக் ரேட்டில் 1569 ஓட்டங்களை குவித்துள்ளார். ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்கள் எடுத்ததே அவரது அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.

மேலும், 42 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த

பந்துவீச்சாகும்.ஆனால், பொலார்ட், மேற்கிந்தியத் தீவுகளுக்காக ஒருபோதும் டெஸ்ட் விளையாடவில்லை.

உலகம் முழுவதும் ரி-20 கிரிக்கெட் விளையாட்டில் புரட்சியை ஏற்படுத்திய பொலார்ட், கரீபியன் பிரீமியர் லீக், ஐ.பி.எல், பிக் பேஷ், பங்களாதேஷ் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சுப்பர் லீக், கவுண்டு போட்டிகள், குளோபல் ரி-20 உள்ளிட்ட வெளிநாட்டு ரி-20 கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.

தென்னாபிரிக்காவின் டேவிட் மில்லருக்குப் பிறகு, டெஸ்டில் விளையாடாமல் அதிக சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் பொலார்ட் ஆகும்.

கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தென்னாப்பிரிக்காவில் ஒரு தொடருக்கு முன்னதாக, மேற்கிந்திய தீவுகள் சபை மற்றும் வீரர்கள் சங்கம் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, டேரன் சமி மற்றும் டுவைன் பிராவோ ஆகியோருடன் இணைந்து அணியிலிருந்து விலகினார்.

பின்னர், 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினார், பின்னர் 2019ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் ரி-20 அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்தியாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, உள்நாட்டில் அயர்லாந்திற்கு எதிராக, இலங்கைக்கு எதிராக உள்நாட்டிலும் ரி-20களில் இலங்கைக்கு எதிராகவும் தொடர் வெற்றிகளை அவர் வழிநடத்தினார்.

குறிப்பாக, அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் வெற்றிகள் அவரது பதவிக்காலத்தில் சிறப்பம்சங்கள் ஆகும்.
ஒட்டுமொத்தமாக, அவர் மேற்கிந்திய தீவுகளை இரண்டு வடிவங்களில் 61 போட்டிகளில் வழிநடத்தினார், அதில் அணி 25 வெற்றி மற்றும் 31 தோல்விகளை சந்தித்தது.

இதுதவிர, 2012ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ரி-20 உலகக் கிண்ணத்தை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பொல்லார்டும் இடம்பெற்றிருந்தார். மேலும், காயம் காரணமாக 2016 ரி-20 உலக்கிண்ணத் தொடரில் அவரால் மேற்கிந்தியத் தீவுகள் அணியை பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை.

15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், 100க்கும் மேற்பட்ட ரி-20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்கே உரித்தானது.

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்சயவின் பந்துவீச்சுக்கு ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் ஹெர்ஷல் கிப்ஸ் மற்றும் யுவராஜ் சிங்குடன் இணைந்து ஆண்களுக்கான சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு வரலாற்றில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பொல்லார்ட் பெற்றார்.

இந்த ஆண்டு இறுதியில் அவுஸ்ரேலியாவில் நடைபெறும் ரி-20 உலகக் கிண்ணம், அடுத்த ஆண்டு இந்தியாவில் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரும் நடைபெறவுள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இப்போது இரண்டு வடிவங்களிலும் புதிய அணித்தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஏப்ரல் 25ஆம் திகதி வரை எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது – லிட்ரோ நிறுவனம்

Next Post

கண்டம் விட்டு கண்டம் பாயும் சர்மாட் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்ததாக ரஷ்யா அறிவிப்பு!

Related Posts

IPL Qualifier 2 இன்று: இறுதிப் போட்டிக்கு நுழையப்போவது யார்?
கிரிக்கெட்

IPL Qualifier 2 இன்று: இறுதிப் போட்டிக்கு நுழையப்போவது யார்?

2026-05-29
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!
இலங்கை

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!

2026-05-28
தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 
கிரிக்கெட்

தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 

2026-05-28
சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

2026-05-28
‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!
ஆசிரியர் தெரிவு

‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

2026-05-27
மகளிர் ரி20 கிரிக்கெட் தொடரை இழந்த நியூஸிலாந்து ஏ அணிக்கு நேற்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி!
கிரிக்கெட்

மகளிர் ரி20 கிரிக்கெட் தொடரை இழந்த நியூஸிலாந்து ஏ அணிக்கு நேற்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி!

2026-05-26
Next Post
கண்டம் விட்டு கண்டம் பாயும் சர்மாட் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்ததாக ரஷ்யா அறிவிப்பு!

கண்டம் விட்டு கண்டம் பாயும் சர்மாட் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்ததாக ரஷ்யா அறிவிப்பு!

பத்திரிகை கண்ணோட்டம் 21 04  2022

பத்திரிகை கண்ணோட்டம் 21 04 2022

சாண்ட்ரிங்ஹாமில் 96ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் எலிசபெத் மகாராணி!

சாண்ட்ரிங்ஹாமில் 96ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் எலிசபெத் மகாராணி!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
வலி. வடக்கில் 19 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 2400 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் – வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் !

வலி. வடக்கில் 19 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 2400 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் – வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் !

0
பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்!

பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்!

0
அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

0
பொசன் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை!

வெசாக் தினத்தை முன்னிட்டு 61 கைதிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு!

0
இலங்கை இராணுவத்தின் 69 ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

2026-05-30

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.