• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
மீண்டும் உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா வான்வழித்தாக்குதல்! (UPDATE)

Anoj by Anoj
2022/10/17
in உலகம்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்யாவின் இன்றைய ஆளில்லா விமானத் தாக்குதல்களில் உக்ரைனில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது என உக்ரைன் ஜனாதிபதி நிர்வாகத்தின் துணைத் தலைவர் கைரிலோ திமோஷென்கோ தெரிவித்துள்ளார்.

ஈரானின் காமிகேஸ் ஆளில்லா விமானங்களின் மூலம் இன்று (திங்கட்கிழமை) காலை நடத்திய தாக்குத்களில் தலைநகர் கிவ்வில் உள்ள குடியிருப்பு கட்டடம் தாக்கப்பட்டுள்ளது எனவும், இதுவரை பத்தொன்பது பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதல்களில் இருந்து தப்பியவர்களை மீட்கும் முயற்சியில் அவசர பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தீயை எதிர்த்து போராடி கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க அவர்கள் போராடி வருகின்றனர்.

மேயர் விட்டலி கிளிட்ச்கோவும் மற்ற அரசாங்க அதிகாரிகளும் நகர மைய வீட்டுத் தொகுதி மீது தாக்குதல் நடந்த இடத்தில் உள்ளனர்.

மேலும் துறைமுக நகரமான மைகோலைவ்வில் உள்ள சூரியகாந்தி எண்ணெய் தொட்டிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நகர மேயர் கூறினார்.

ரஷ்ய துருப்புகளால் இன்று நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது, மத்திய ஷெவ்சென்கிவ்ஸ்கி பகுதியில் குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்தார்.

‘காமிகேஸ் ஆளில்லா விமானங்கள்’ என்று அழைக்கப்படுபவற்றிலிருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஜனாதிபதி ஸெலென்ஸ்கியின் அலுவலகத்தின் தலைவர் ஆண்ட்ரி யெர்மக் தெரிவித்தார்.

டெலிகிராம் சமூக ஊடகத் தளத்தில் கிளிட்ச்கோ, கடந்த வாரம் பல ஏவுகணைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மத்திய ஷெவ்சென்கிவ்ஸ்கி பகுதியில் மீட்புப் படையினர் இருப்பதாகவும், குடியிருப்பாளர்களை வான்வழித் தாக்குதல் முகாம்களில் தங்குமாறும் கூறினார்.

உக்ரைன் தலைநகர் கீவ்வில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்ததைத் தொடர்ந்து குறைந்தது மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று (திங்கள்கிழமை) காலை உள்ளூர் நேரப்படி சுமார் 07:00 மணிக்கு வெடிப்புகள் நடந்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றில் ஒன்று நகர மையத்திற்கு அருகில் வெடித்தது.

எனினும், இந்த தாக்குதல்களின் போது ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை.

கடந்த வாரம் தலைநகரில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களின் போது, 19பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கடந்த வாரம் ரஷ்யாவை ஆக்கிரமித்துள்ள கிரிமியாவுடன் இணைக்கும் முக்கிய பாலம் மீது குண்டுவீசி தாக்கியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறினார்.

போரின் போது தலைநகர் கிவ்வின் மையம் நேரடியாக குறிவைக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த வார தொடக்கத்தில், உக்ரைன் மீது இன்னும் பெரிய அளவிலான தாக்குதல்கள் நடத்தும் திட்டம் இல்லை எனவும், நாட்டை அழிப்பது தனது நோக்கம் அல்ல என்றும் புடின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: உக்ரைன் தலைநகர் கீவ்ஏவுகணை தாக்குதல்கள்ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்வான்வழித் தாக்குதல்வெடிப்பு சம்பவங்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எல் கிளாசிக்கோ: ரியல் மெட்ரிட் சிறப்பான வெற்றி!

Next Post

உயர் பாதுகாப்பு வலயத்துக்காக யாழில் 1,614.11 ஏக்கர் நிலத்தை சுவீகரிக்க முயற்சி : விவசாயத்தில் ஈடுபடும் இராணுவம்

Related Posts

கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!
அமொிக்கா

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: 3 கட்ட நிபந்தனைகளுடன் புதிய முன்மொழிவை வழங்கியது ஈரான்!

2026-04-27
“பாதிக்கப்பட்ட குடும்பங்களை விட நிறுவனங்களுக்கே முன்னுரிமையா?” – பிரதமர் மீது எஸ்தர் கேய் அதிருப்தி!
இங்கிலாந்து

லண்டன் யூத சமூகத்தின் மீது தாக்குதல் முயற்சி: பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது!

லண்டனில் கிளப்பில் பயங்கரத் தீ விபத்து: உயிராபத்தை விளைவிக்க முயன்றதாக 51 வயது நபர் கைது!

வட அயர்லாந்து கார் குண்டு வெடிப்பு: பச்சிளம் குழந்தைகள் நூலிழையில் உயிர் தப்பினர் !

ரஷ்யா சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்
ஆசிரியர் தெரிவு

ரஷ்யா சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்

2026-04-27
Next Post
உயர் பாதுகாப்பு வலயத்துக்காக யாழில் 1,614.11 ஏக்கர் நிலத்தை சுவீகரிக்க முயற்சி : விவசாயத்தில் ஈடுபடும் இராணுவம்

உயர் பாதுகாப்பு வலயத்துக்காக யாழில் 1,614.11 ஏக்கர் நிலத்தை சுவீகரிக்க முயற்சி : விவசாயத்தில் ஈடுபடும் இராணுவம்

மென்செஸ்டரில் உள்ள சீன தூதரக வளாகத்திற்குள் ஹொங்கொங் ஜனநாயக ஆதரவாளர் மீது தாக்குதல்!

கடன் நெருக்கடியை சமாளிக்க அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் – பரிஸ் கிளப்

கடன் நெருக்கடியை சமாளிக்க அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் - பரிஸ் கிளப்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து!

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான “ஓவியம் யாரும் வரையலாம் நிகழ்வு!

வில்பத்து வன வழக்கு: பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.