• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
தென் இலங்கைக்கு பலத்த சந்தேகத்தினை ஏற்படும் வகையில் நிபந்தனைகளை முன்வைக்க கூடாது என்கின்றார் ஜெஹான் பெரேரா

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள் – தற்போது நாடகமாடவேண்டியதில்லை – சர்வ கட்சி கூட்டத்தில் தெரிவித்தார் சம்பந்தன்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/12/14
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
71 0
A A
0
42
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்ற விடயத்தை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில், அனைத்து தென்னிலங்கை கட்சிகளும் கொள்கை அளவில் ஏற்றுள்ளன என கூறப்படுகின்றது.

அத்துடன், காணிப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்களுக்கும் உடனடி தீர்வுகளை வழங்குவது சம்பந்தமாக சாதகமாக ஆராயப்பட்டுள்ளன.

நல்லிணக்கத்துக்கான  சர்வக்கட்சி கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை 6 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் கூட்டத்தில்  பங்கேற்றிருந்தனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்,  தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சிவி விக்னேஸ்வரன், சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் உட்பட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி என்பன சர்வக்கட்சி கூட்டத்தை புறக்கணித்திருந்தன.

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்டோர் பங்கேற்காவிட்டாலும், அவர்களின் கூட்டணி பிரதிநிதிகள் குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

சுமார் 2 மணிநேரம்வரை நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டம் சம்பந்தமாகவே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

2023 பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளதால், அரசமைப்பில் தற்போது ஓர் அங்கமாகவுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரியுள்ளார்.

இதனை ஆரம்ப புள்ளியாக கருதி, அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர முடிவும் எனவும் அவர் கூறியுள்ளார். மலையக தமிழர்களின் அபிலாஷைகள் பற்றியும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக பொது இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு காலமெடுக்கும் என்பதால், என்ன அடிப்படையிலான தீர்வு என்ற இணக்கப்பாட்டுக்கு பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் வர வேண்டும் என ஜனாதிபதி தரப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு முடியாத பட்சத்தில், இயலாமை தொடர்பில் அறிக்கையிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

புதிய அரசமைப்பை கொண்டுவருவதில் தாமதம் ஏற்படக்கூடும், ஆனால் தீர்வு பற்றி இணக்கப்பாட்டு ஆவணத்தை வழங்கினால் அது நம்பகமாக இருக்கும் என இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோல வடக்கு, கிழக்கில் நிலவும் காணிப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பன உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

படையினர், வன திணைக்களம், மகாவலி அதிகார சபை என்பன ஆக்கிரமித்து வைத்துள்ள மக்களின் காணிகள்,  சுதந்திர தினத்துக்குள் விடுவிக்கப்பட வேண்டும்.  காணி அபகரிப்பு நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை வரவேற்கின்றோம். ஏனையோரும் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் சம்பந்தன் இதன்போது தெரிவித்துள்ளார்.

“காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள். தற்போது நாடகமாடவேண்டியதில்லை.  எனவே, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

பொறுப்புகூறப்பட வேண்டும் அதனை உடனடியாக செய்யலாம்.” எனவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.  தான் இவ்வாறு கருத்து வெளியிட்டதை சம்பந்தனும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் உடனடியாக கோரப்பட்ட தீர்வுகளுக்கு, நிறைவேற்று அதிகாரத்துறையில் இடம்பெறவேண்டிய பொறுப்பு உரிய வகையில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டாலும், அது குறித்து முடிவு எட்டப்படவில்லை.

அடுத்த சுற்று பேச்சை ஜனவரி முற்பகுதியில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என சந்திப்பில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Related

Tags: இரா.சம்பந்தன்சர்வக்கட்சிஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சங்கானை பிரதேச செயலகத்தில் மாபெரும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

Next Post

IMF கடன் வசதி இவ்வருடத்தில் சாத்தியமற்றது?

Related Posts

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!
இலங்கை

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

2026-07-31
ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை
அம்பாறை

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

2026-07-31
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

2026-07-31
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !
இங்கிலாந்து

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

2026-07-31
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!
இங்கிலாந்து

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு கடத்த தீர்மானம்!

2026-07-31
அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை!
இலங்கை

அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை!

2026-07-31
Next Post
சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடலைத் தொடங்க அமைச்சரவை அங்கீகாரம் !

IMF கடன் வசதி இவ்வருடத்தில் சாத்தியமற்றது?

நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளை பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம்!

நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளை பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம்!

பொது இடங்களில் கழிவுகளை வீசுவோர் தொடர்பில் ஆதாரம் தருவோருக்கு சன்மானம் – யாழ்.மாநகர சபை அறிவிப்பு

இலங்கையில் தனிநபர் கடன் 11 இலட்சம் ரூபாய்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

0
ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

0
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

0
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

0
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு கடத்த தீர்மானம்!

0
காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

2026-07-31
ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

2026-07-31
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

2026-07-31
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

2026-07-31
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு கடத்த தீர்மானம்!

2026-07-31

Recent News

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

2026-07-31
ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

2026-07-31
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

2026-07-31
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

2026-07-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.