லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் அரச முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் சுகாதார அமைச்சுக்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி சுகாதார அமைச்சின் போக்குவரத்து திணைக்களத்தில் கடமையாற்றும் பொது முகாமைத்துவ உதவியாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கலிகமுவ, போயாகம பிரதேசத்தில் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகனத்தை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கி அறிக்கை அளிக்க 80,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக அவர் மீதான குற்றச்சாட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















