• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சிவப்பு எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்!

சிவப்பு எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/05/20
in இலங்கை, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் பல பகுதகிள் 150 மில்லி மீற்றலுக்கும் அதிகமாக மழை வீழ்ச்சி பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஊடாக இடைக்கிடையில் மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீடித்த சீரற்ற காலநிலையால், புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 284 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரத்து 447 பேர் பாதிக்கப்பட்டள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், நாட்டில் சில நாட்களாக தொடரும் நிலவும் சீரற்ற கால நிலையால் இரத்தினபுரி மாவட்டத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 432 குடும்பங்களைச் சேர்ந்த 946 பேரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2 ஆயிரத்து 618 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 464 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், களுத்துறை மாவட்டத்தில் 2 குடும்பங்களைச் 5 பேரும் காலி மாவட்டத்தில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 759 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 340 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 140 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, நாட்டின் பல பகுதகிள் கன மழைக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்குமே இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி அடுத்த 24 மணித்தியாலங்களில் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாளத்தில் நாட்டின் ஹொரண பகுதியில் 116 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி அத்தனுகலு ஓயா மற்றும் களுகங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் குறித்த நீர்நிலைகளை அண்டிய தாழ்நிலப் பிரதேசங்களில் வாழும் மக்கள் வெள்ளம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுளளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்; தெரிவித்துள்ளது.

அதன்படி, பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கம்பஹா, கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மண் சரிவு எச்சரிக்கை இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை நண்பகல் 12 மணிவரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுனம் தெரிவித்துள்ளது.

Related

Tags: சிவப்பு எச்சரிக்கைவளிமண்டலவியல் திணைக்களம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாடசாலைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

Next Post

வட துருவ நாடுகளின் செயற்பாடு குறித்து ஜனாதிபதி கவலை!

Related Posts

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

2026-06-17
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-17
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!
இலங்கை

கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

2026-06-17
ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!
இலங்கை

ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

2026-06-17
சற்று குறைவடைந்த தங்கத்தின் விலை!
இலங்கை

வடக்கு, கிழக்கில் மீட்கப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்கள்: அளவீட்டுப் பணிகள் நிறைவு என சிஐடி அறிவிப்பு!

2026-06-17
க.பொ.த. சாதாரணதர பரீட்சை : யாழ்.வேம்படி மாணவி சாதனை !
இலங்கை

பல்கலைக்கழக புதிய மாணவர் சேர்க்கை ஒகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஆரம்பம்!

2026-06-17
Next Post
கைவிடப்பட்ட மகாவலித்திட்டங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை : ஜனாதிபதி ரணில்!

வட துருவ நாடுகளின் செயற்பாடு குறித்து ஜனாதிபதி கவலை!

இலங்கையில் நாளை துக்க தினம்!

இலங்கையில் நாளை துக்க தினம்!

ஈரானிய ஜனாதிபதியின் மறைவு : நாட்டில் துக்கதினம் அனுஷ்டிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு!

ஈரானிய ஜனாதிபதியின் மறைவு : நாட்டில் துக்கதினம் அனுஷ்டிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

0
லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

0
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

0
ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

0
நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

2026-06-17
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-17
லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

2026-06-17
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

2026-06-17
ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

2026-06-17

Recent News

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

2026-06-17
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-17
லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

2026-06-17
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

2026-06-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.