அதிக நீர் வரத்து காரணமாக திருகோணமலை – கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன
இதன் காரணமாக குறித்த பகுதியில் உள்ள வயல் நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாகவும் கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்தமையினால் இவ்வாறு மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கந்தளாய் நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 114,000 ஏக்கர் அடி என்றும், பல நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, நிரம்பி வழியும் நீர் மட்டம் தற்போது 113,708 ஏக்கர் அடியை எட்டியுள்ளதாகவும், 10 வான் கதவுகளும் திறக்கப்பட்டதாகவும் தலைமை நீர்ப்பாசன பொறியியலாளர் சிந்தக சுரவீர தெரிவித்தார்
மேலும் பத்து வான் கதவுகளும் ஒரு அடிக்கு திறந்து விடப்பட்டிருப்பதால், வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



















