• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -09

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -09

இளங்கோ  பாரதியின் அழகிய அனுபவம் 9

Ilango Bharathy by Ilango Bharathy
2025/04/07
in இந்தியா, சிறப்புக் கட்டுரைகள், தமிழகம்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

blankஇளங்கோ  பாரதியின் அழகிய அனுபவம் 9 (05.01.2025)

கீழடியைப் பார்வையிட்டு நெகிழ்ந்த உள்ளங்களுடன்   புறப்பட்ட   எமது ‘ வேர்களைத்தேடி’ …  பண்பாட்டுப் பயணம்  காரைக்குடியை அடைந்தபோது இரவாகியிருந்தது . காரைக்குடியிலுள்ள பழைமையான    பிரமாண்ட  இல்லம்  ஒன்றில் நாம் தங்குவதற்கு ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது.  தமிழ்த் திரைப்படங்களில்  காணும்  பண்ணையார்  இல்லமொன்றை  நினைவுபடுத்தும் வகையில் அவ் இல்லம்   அமைந்திருந்தது.

blank
(தங்கியிருந்த பிரமாண்ட இல்லம்

பழமையும்  புதுமையும் கலந்த  கலவையொன்றாக   அறைகள்  மற்றும் அதன்  ஏனைய  பகுதிகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. நவீன சமையலறைகளில் வழக்கொழிந்துபோன  உரல் , உலக்கை , அம்மி, குளவி  போன்றவற்றை  வரவேற்பறையில் காட்சிப் பொருட்களாக ஒழுங்கமைத்திருந்தனர். பங்கேற்பார்கள் ஒவ்வொருவரும் தம் பயணக்களைப்பை   மறந்து  உற்சாகமாக அவ் இல்லத்தினைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தனர்.

blank blank

எனினும்  எதனையும் இரசிக்கவோ அனுபவித்து மகிழவோ  இயலாதபடி  எனது உடல்  நலம் குன்றியிருந்தது.  அறையினுள்  நுழைந்து  படுக்கையைத் தஞ்சமடைந்து  விட்டேன்.

blank

எனக்கான  இரவுணவை என்னோடு அறையில் தங்கியிருந்த  சகோதரி துளசி அறைக்கே எடுத்து வந்ததுடன் உடன் பிறந்த ஒருவரைப்போன்று  அந்த உணவை பிடிவாதமாக  என்னை உண்ணவைத்தது  என்னால் என்றுமே மறக்க முடியாத அனுபவங்கள்.

பொழுது புலர்ந்ததும்   உடல் உபாதை காரணமாகத்   தாமதமாகவே எழுந்திருந்தேன். பங்கேற்பாளர்கள்  அனைவரும் அடுத்த பயணத்துக்குத்  தயாராகியிருந்தனர். அவசரஅவசரமாகக் குளித்துத்  தயாராகி கானாடு காத்தான் அரண்மனை நோக்கிய பண்பாட்டுப் பயணத்தில் இணைந்து கொண்டேன்.

வாசக நேயர்களுக்காக  கானாடுகாத்தான்  அரண்மனை தொடர்பான எனது இணையவழித் தேடலை முன்வைக்கிறேன்.

கானாடு காத்தான் அரண்மனை

blank

சிவகங்கை மாவட்டம்  காரைக்குடி  வட்டத்தில்  காநாடு காத்தான்  என்னும்   ஊரில் உள்ள ஒரு மாளிகை  இதுவாகும். இது செட்டிநாட்டு அரண்மனை என்றும் அழைக்கப்படுகிறது. சிவகங்கை  நகரத்திலிருந்து 60 கிலோமீட்டர்  தொலைவிலும் காரைக்குடியிலிருந்து 15 கிலோமீட்டர்  தொலைவிலும்  இது உள்ளது.

blank

இந்த அரண்மனையானது  ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களால்  1912 ஆம் ஆண்டில்  கட்டி முடிக்கப்பட்டது. கண்களைக்  கவரும்  வேலைப்பாடுகள் நிறைந்த இந்த அரண்மனையின் கட்டுமானப்பணி ஏழு ஆண்டுகள்  நடைபெற்றதாகக்    கூறப்படுகிறது.  இந்த அரண்மனை செட்டிநாட்டின் பாரம்பரிய கட்டிடக்கலையை  வெளிப்படுத்துகின்ற ஒரு சான்றாக அமைந்துள்ளது.

blank

கலை , கட்டிடக்கலை, பாரம்பரியம் ஆகியவற்றின் அதிசயிக்கத்தக்க கலவையாக  அமைந்துள்ளதுடன்  செட்டிநாட்டு மக்களின் சிறந்த பண்பாட்டின் பெருமையை  வெளியுலகிற்கு  வெளிப்படுத்துகின்ற  மிக உயரிய  உதாரணமாகவும்   இது காணப்படுகிறது.

blank

செட்டியார்களின் விருப்பத்திற்குரிய  பாரம்பரிய  பாணியே  இந்த அரண்மனையெங்கும்  விரவிக் கிடக்கின்றது. அலங்கார விளக்குகள் , தேக்குமரச் சாமான்கள், பளிங்குக் கற்கள்,  கண்ணாடிகள், கம்பளங்கள், ஸ்படிகங்கள் போன்றவை வெளிநாடுகளிலிருந்து  இறக்குமதி செய்யப்பட்டுப்  பயன்படுத்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் இவ் அரணமனை வெவ்வேறு வகையான கலை மற்றும் பாணிகளைக்  கொண்டு அமைந்துள்ள நிலையில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

blank

காரைக்குடி, பள்ளத்தூர், ஆத்தங்குடி , கோதமங்களம் பகுதிகளில் காணப்படுகின்ற  செட்டிநாட்டு வீடுகள் மிகுந்த வேலைப்பாடு  கொண்டவையாக அமைந்துள்ளதாகக்  கூறப்படுகிறது. அவற்றில் பல வீடுகள்  இறக்குமதி  செய்யப்பட்ட  உயர்வகை  மரங்கள், கண்ணாடி வேலைப்பாடுகளுக்கு புகழ் பெற்றவையாக  அமைந்துள்ளன. எனினும் கானாடு காத்தான் அரண்மனையில் இத்தகைய வேலைப்பாடுகள் சற்று  அதிகமாகவே காணப்படுகின்றன.

blank

இந்த அரண்மனையைக் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட  பல பொருட்கள்  கிழக்கு ஆசிய நாடுகளில்  இருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். அரண்மனையில்  விலை உயர்ந்த தேக்கு, பளிங்கு அல்லது  கிரானைட்டால் செய்யப்பட்ட  பெரிய தூண்கள்  உள்ளன.

blank

blank

blank

இந்த அரண்மனை  அகண்ட தாழ்வாரத்தைக் கொண்டு அமைந்துள்ளது.  பொதுவாகவே இதுபோன்ற  அமைப்பு  இப்பகுதியில்  காணப்படுகின்ற அனைத்து கட்டடங்களிலும்  காணப்படுகின்ற  சிறப்புக்கூறு ஆகும்.

blank

இந்த அரண்மனையின் கட்டிடக்கலை குறித்து பல்வேறு ,நாடுகளைச்   சேர்ந்த கட்டிடக்கலைஞர்கள் ஆய்வு செய்துள்ளனர். அரண்மனையின்  முன்புறத்தில்  அனைவரையும் வரவேற்கும் வகையில் நுழைவு வாசலின் இருபுறமும் விசாலமான திண்ணைகள் காணப்படுகின்றன,  இத்திண்ணைகளில்  காணப்படும் கம்பீரமான மரத்தூண்கள்  பண்பாட்டு  அடையாளமாகவே  காணப்படுகின்றன.. பர்மா  உள்ளிட்ட  வெளிநாடுகளிலிருந்து  கொண்டு வரப்பட்ட  தேக்கு  மரப்பலகையில் செய்யப்பட்ட கதவுகளும்  ஜன்னல்களும்  கலையம்சத்தை உணர்த்துகின்றன.

blank

blank

இல்லத்தில்   நடைபெறுகின்ற  கல்யாணச்சடங்குகள்  மற்றும் மதம் சார்ந்த சடங்குகள் அங்கு காணப்படுகின்ற அகன்ற முற்றத்தில் நடைபெற்றதாக  அறியப்படுகிறது. முற்றத்தின் ஒரு மூலையில் ராஜா  அண்ணாமலைச் செட்டியாரின் மனைவி   பூசை செய்த பூசை அறை அமைந்துள்ளது. இந்த அரண்மனையில்  அரச குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த  விலை உயர்ந்த பல பழமையான பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

blank

இந்த அரண்மனையில் 1990 சதுரஅடியில் 9 கார்களை  நிறுத்தும் அளவுக்கு வசதிகள்,  மின்தூக்கி (லிப்ட்) வசதி உள்ளது. மாளிகையின் வெளிப்புற மதிற்சுவரில் குதிரைகளை நிறுத்திவைப்பதற்கான இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தெருவில் தொடங்கி மற்றொரு தெருவில் முடியும் அளவிற்கு  மாளிகை விஸ்தாரமுடையதாகக் காணப்படுகிறது.

blank

………………………..

எமது பண்பாட்டுப் பயணம்  கானாடு காத்தான் அரண்மனையை வந்தடைந்ததும்  அதன் வெளிப்புறத் தோற்றத்தைக் கண்டு மலைத்து நின்றோம். இவ்வாறான ஓர் அரண்மனையை நேரில் தரிசிப்பதென்பது  எனது வாழ்வில்  கிடைத்த  முதல் அனுபவம் ஆகும்.

blank

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில்  எமக்குக் கிடைத்த பல இன்ப அனுபவங்களின்  வரிசையில்  இந்த அரண்மனைத் தரிசனமும்  இணைந்து கொண்டது.

blank

வாகனத்தை   விட்டிறங்கி  அரண்மனையுள் நுழைந்தபோது  எனது உடல் உபாதையையும் மறந்து  மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.  செட்டிநாட்டின்  வரலாற்றுச்  செழுமையைப் பிரதிபலிக்கும் கானாடுகாத்தான் அரண்மனை வாசலில் வைத்து அங்குள்ள அலுவலர்களால் வரவேற்கப்பட்டோம்.

blank

 

பங்கேற்பாளர்கள் அனைவருக்கும்  ரோஜாப்பூக்கள் வழங்கி வரவேற்றதோடு . அரண்மனையின் சிறப்புக்களையும்  எமக்கு எடுத்துரைத்தனர். பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும்  தமக்கு விருப்பமான  இடங்களில்  நின்று அந்த இனிய அனுபவத்தை புகைப்படம் எடுத்து பதிவு செய்து கொண்டனர்.

blank

blank

பங்கேற்பாளர்கள் அனைவரும் அரண்மனையைச் சுற்றிச் சுற்றிவந்து புகைப்படமெடுத்து தமது பொழுதை மகிழ்வாகக் களிக்க,  உடல் நலம் பாதிப்புற்ற நானோ  அதனை அனுபவிக்க முடியாமல் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தேன். புறப்படும் தருணத்தில்  எமக்கு காரைக்குடி விசேட பலகாரங்கள் அடங்கிய ஒரு பரிசுப்பொதி வழங்கி  வைக்கப்பட்டது.

blank

நாம் அங்கிருந்து  புறப்பட்டபோது மதியமாகியிருந்தது. மதிய போசனத்துக்காக  செட்டிநாடு மேனர் ஹோட்டலில்  சுவையான செட்டிநாட்டு  உணவை சுவைக்கும்  வாய்ப்புக் கிடைத்தது. அனைவரும் உணவருந்த பஸ்ஸிலிருந்து  இறங்கிச்செல்ல   உடல் நலம் குன்றியிருந்த  நானோ உணவுண்பதில்  நாட்டமின்றி பஸ்ஸில் தனித்திருந்தேன்.

மதியபோசனத்தின்பின்  பாரம்பரியமிக்க ஆத்தங்குடி ரைல்ஸ் தொழிற்சாலையைப்   பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டோம் . எனினும் மருத்துவ சிகிச்சை பெறவேண்டி நானும் சுகவீனமுற்றிருந்த சைஹானா மற்றும் ஆஸ்ச்  ஆகியோர் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டோம்.

ஆத்தங்குடி ரைல்ஸ் தொழிற்சாலையைப் பார்வையிட  முடியவில்லையே  என்ற ஏக்கமும்  மன ஆதங்கமும்  இப்போதும்  எனக்குண்டு.  எனினும்  அதனைப் பார்வையிட்ட பங்கேற்பாளர்களில் ஒருவரான யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைச் சேர்ந்த சகோதரன் கோபிராமின் அனுபவப் பகிர்வினை வாசகர்களுக்கு தர முயல்கிறேன்.

blank
சகோதரன் கோபிராம்

ஆத்தங்குடி டைல்ஸ் நிறுவனத்தை பார்வையிட்டு  பாரம்பரியமான கைவினைத் தயாரிப்பு  முறையைத் தெரிந்து கொண்டதாக  கோபிராம்  என்னிடம்  தெரிவித்தார். செட்டிநாட்டின்  கட்டிடக்கலையின் அடையாளமாக விளங்கும்  இந்த டைல்ஸ்களின்  முக்கியத்துவத்தை  உணரமுடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

blank

blank

blank

blank

இதேவேளை மருத்துவ சிகிச்சை பெறவேண்டி  தஞ்சாவூருக்கு  காரில் அழைத்துச் செல்லப்பட்ட எமக்கு  உற்ற துனையாக இருந்து உதவிய இணைப்பாளர்களான கனிமொழி மற்றும் ஷெபின் ஆகியோரை  இத்தருணத்தில் நன்றியோடு நினைவுகூருகின்றேன். அவர்கள்  வழங்கிய  முறையான மருத்துவசிகிச்சை மற்றும்  கரிசனையுடன் கூடிய கவனிப்பும் எம்மை நோயிலிருந்து மீண்டுவர உதவியது என்ற உண்மையை  நன்றியுடன்  இங்கு பதிவுசெய்ய  விரும்புகிறேன்.

………………………………..

ஆத்தங்குடி டைல்ஸ் நிறுவனத்தை பார்வையிட்ட பங்கேட்பாளர்கள் அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டையிலுள்ள சித்தன்னவாசல் பகுதிக்கு பயணித்ததாக சகோதரன் கோபிராம்  என்னிடம் தெரிவித்திருந்தார். அத்துடன் இது  பழமையான  குகைக் கோயில்களுக்கும் ஜைனர் ஓவியங்களுக்கும்  பெயர்பெற்ற  இடமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் பங்கேற்பாளர்கள் இந்த தொல்பொருள் தளத்தின்  வரலாற்று மற்றும்  கலாச்சார முக்கியத்துவத்தை ஆராய்ந்து தமிழ்நாட்டின் தொன்மையான பாரம்பரியத்தை அறிந்து கொண்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.  அவர் கூறியதற்கு இணங்க சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள் குறித்து நான் தேடிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள்

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில்   சித்தன்னவாசல் என்ற கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்களுக்கும் பெயர் பெற்றது..

blank

blank

blank

blank

blank

சமணர்  காலத்து ஓவியங்களான இவை கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.  குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்ன வாசல் ஓவியங்கள் சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட  வர்ணங்களைக் கொண்டு வரையப்பட்டவை. வட இந்தியாவின் அஜந்தா ஓவியங்களைப்போன்று தனிச்சிறப்பு மிக்க இந்த ஓவியங்கள்  சுமார் 1000 – 1200  ஆண்டுகள் பழமையானவை.

blank

blank

போதிய பராமரிப்பின்றி புகை படிந்திருந்த இக்குகைகளும் குகை ஓவியங்களும் கி.பி 1990களில்  நிறம் மங்கத் துவங்கியதால் செயற்கை வர்ணம் கொண்டு புதுப்பிக்கப்பட்டன.

தமிழக அரசின் தொல்லியல் துறை இதனைப் பாதுகாத்து வருகிறது.சுமார் 70 மீட்டர் உயரமேயுள்ள  இக்குன்றுகளின்மேல் சமணர்களின் படுக்கையும்  தவம் செய்யும் இடமும் , பல இடங்களில் குடவறைகளும் காணப்படுகின்றன.இவ்விடத்தின் மிக அருகில்  உள்ள ஏலடிப்பட்டம் என்ற இடத்தில்  சமணர்களின் படுக்கைகளும்  தமிழ்க் கல்வெட்டுக்களும்  காணப்படுகின்றன.அறிவர் கோயில் எமப்படும் சமணகோயில் ஒன்றும் இங்குள்ளது.

 

blank

blank

சித்தன்னவாசலில் தமிழிக் ல்வெட்டுக்கள் காணப்படுவதால் அது  முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்  காலத்தியது என்று கருதப்பட்டாலும்  அங்குள்ள கல்வெட்டு ஒன்றில் இதை மாறன் என்ற பாண்டியமன்னன் சீர்செய்தான் எனக்கூறுவதால்  இந்த ஓவியம் சேந்தன் மாறன் (கி.பி 625 – 640 ) காலத்திலோ மாறவர்மன் அரிகேசரி(கி.பி  640 –  670) காலத்திலோ சீரமைக்கப்பட்டது என்பது உறுதியானது.

blank

………………….

செட்டிநாடும் சித்தன்னவாசலும்  தமிழ்நாட்டின்  பாரம்பரியத்தையும்  கைவினைக்கலைகளையும்  தொல்பொருட்சிறப்புக்களையும்  காட்சிப்படுத்துகின்றன. இந்த பொக்கிஷமான அனுபவங்களைச் சுமந்த  பங்கேற்பாளர்களுடன் ‘வேர்களைத்தேடி ‘…பண்பாட்டுப் பயணம்  தஞ்சாவூரை  நோக்கி நகர்ந்தது.தஞ்சாவூரின்  கலைப்பொக்கிஷங்களை  கண்டு நெகிழ்ந்த மகிழ்ச்சியான தருணங்களை எனது அடுத்த பதிவில் தர இருக்கிறேன்  அதுவரை  காத்திருப்போமா?.

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -09

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -8

Related

Tags: #ILANGOBHARATHYChettinad PalaceIango BharathyINDIAKanadukathanMK StalinNellaiappar TempleNon ResidentRameshwaram TempleRock Cut Cave TempleSittanavasalTamil TN GovtV.Tamils NRT Reaching Your Rootsஇளங்கோ பாரதிவேர்களைத் தேடி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் அணிகள் மோதல்!

Next Post

தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

Related Posts

பாதுகாப்பு ஒப்பந்தங்களை புதுப்பிக்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!
ஆசிரியர் தெரிவு

பாதுகாப்பு ஒப்பந்தங்களை புதுப்பிக்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

2025-12-01
“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”
JUST IN

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”

2025-11-30
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!
இந்தியா

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!

2025-11-30
மா*வீரர் நாளுக்குப் பின் வீசிய புயல்! நிலாந்தன்.
இலங்கை

மா*வீரர் நாளுக்குப் பின் வீசிய புயல்! நிலாந்தன்.

2025-11-30
வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் சரிந்த மண்மேடு-  அகற்ற சென்றவர்கழும் மண்சரிவில் சிக்கியுள்ளனர்!
இந்தியா

வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் சரிந்த மண்மேடு- அகற்ற சென்றவர்கழும் மண்சரிவில் சிக்கியுள்ளனர்!

2025-11-29
டெல்லி குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையவர் வீடி இடித்து நொறுக்கப்பட்டது!
இந்தியா

புதுடில்லி கார் குண்டுவெடிப்பு – வெளியான மேலும் பல உண்மைகள்!

2025-11-28
Next Post
தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி  அறிவிப்பு!

தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

இரகசிய பொலிஸ் பாதுகாப்பில் ‘மிதிகம ருவான்‘

தம்பலகாமம் ஈச்சநகர் வனப்பகுதியில் துப்பாக்கி மீட்பு!

நாமல் ராஜபக்‌ஷ இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை!

நாமல் ராஜபக்‌ஷ இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

0
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

0
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

0
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

0
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

2025-12-01
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

2025-12-01
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

2025-12-01

Recent News

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

2025-12-01
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

2025-12-01
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.