முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் மேலும் இருவருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தாக்கல் செய்த வழக்கின் மேலதிக விசாரணையை 2026 மார்ச் 14 ஆம் திகதி எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (09) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2015 ஜனாதிபதித் தேர்தலின் போது அரசியல் நோக்கங்களுக்காக 600 ஜி.ஐ. குழாய்களை வாங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறி, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரூபாயை செலவழித்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.












