லண்டனின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிங்ஸ்டனில் (Kingston), இடம்பெற்ற பயங்கர விபத்தில் மோபெட் (Moped) ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு 11:37 மணியளவில் வுட் ஸ்ட்ரீட் (Wood Street) மற்றும் ஹார்ஸ் ஃபேர் (Horse Fair) சந்திப்பு பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர், சம்பவ இடத்தில் நிறுத்தாமல் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஒரு கருப்பு நிற கார் அந்த இளைஞரின் மோபெட் மீது மோதியுள்ளது எனவும் மோதிய வேகத்தில் காரை நிறுத்தாமல் அந்த ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் எனவும் மெட்ரோபாலிட்டன் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் தப்பி ஓடிய கார் ஓட்டுநரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு சிறப்பு அதிகாரிகள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விபத்தை நேரில் பார்த்த சாட்சிகள் அல்லது அந்த வழியாகச் சென்ற வாகனங்களின் டேஷ் கேம் (dash cam) பதிவுகள் வைத்திருப்பவர்கள் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.













