• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
செம்மலை பெரியகுளக்கட்டுச் சீரமைக்குமாறும் புளியமுனையில் யானைவேலி அமைக்குமாறும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

செம்மலை பெரியகுளக்கட்டுச் சீரமைக்குமாறும் புளியமுனையில் யானைவேலி அமைக்குமாறும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/24
in இலங்கை, பிரதான செய்திகள், முல்லைத்தீவு, வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு – செம்மலை பெரியகுளத்தின் கட்டைச் சீரமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், செம்மலை கிழக்கு பகுதியிலுள்ள புளியமுனையில் யானைவேலி அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கமநல உதவி ஆணையாளரிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கைவிடுத்து குறித்த இடங்களுக்கு நேரில் வருகைதந்து பார்வையிடுமாறும் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர், எதிர்வரும் 27 ஆம் திகதி குறித்த பகுதிக்கு நேரடியாக வருகைதந்து நிலமைகளைப் பார்வையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த 22 ஆம் திகதி அன்று செம்மலைப் பகுதியில் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியதுடன், அதன்தொடர்ச்சியாக நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

அந்தச் சந்திப்பின்போதே மேற்குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு – செம்மலைப்பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்தத 22.02.2025அன்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நாடாத்தியிருந்தார்.

குறித்த மக்கள் குறைகேள் சந்திப்பில் முல்லைத்தீவு – செம்மலை கமக்கார அமைப்பு பிரிவிலுள்ள பெரியகுளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுத்துள்ளதாக அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், நிலமைகளும் நேரடியாகக் காண்பிக்கப்பட்டது.

அந்தவகையில் சுமார் 75ஏக்கர் வயல்நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யக்கூடிய குறித்த பெரியகுளத்தின் அணைக்கட்டு மூன்று இடங்களில் உடைப்பெடுத்துக் காணப்படுகின்றது.

இதனால் கடல்நீர் குளத்தினுள் உட்புகுவதால் வயல் நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயநிலை காணப்படுவதாகவும், கிராமத்தின் குடிநீரிலும் பாரிய தாக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் இதன்போது மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடு செய்யப்பட்டது.

அத்தோடு குறித்த குளத்தின் அணைக்கட்டை செம்மலை மற்றும் செம்மலை கிழக்கு கிராம மக்கள் மயானத்திற்கு செல்வதற்கான பாதையாகவும் பயன்படுத்திவந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது குறித்த அணைக்கட்டு உடைப்பெடுத்துள்ளதால் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்துச்செல்வதில் செம்மலை மற்றும் செம்மலைகிழக்கு கிராமமக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றமை தொடர்பிலும் இதன்போது அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அதேவேளை இந்த குளத்தின் அணைக்கட்டினைச் சீரமைத்துத் தருமாறு உரியவர்களுக்கு கமக்கார அமைப்புக்களினூடாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும், இதுவரை குறித்த குளக்கட்டினை சீரமைப்பதுதொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லையெனவும் இதன்போது அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடுசெய்தனர்.

அத்தோடு செம்மலை கிழக்கு, புளியமுனைப்பகுதியில் செம்மலை மற்றும் செம்மலை கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த மக்களால் பெருமளவில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் அப்பகுதியில் அதிகரித்துள்ள காட்டுயானைகளின் கெடுபிடிகளால் தமதுவிவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது அப்பகுதி மக்களால் சுட்டிக்காட்டப்பட்டதுடன், செம்மலை கிழக்கு புளியமுனைப் பகுதியில் யானைவேலி அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற ஈறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் மக்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

இதன்தொடர்சியாக முல்லைத்தீவு மாவட்ட கமநல உதவி ஆணையாளரை நேரில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

அதேவேவளை குறித்தபகுதிக்கு நேரடியாக வருகைதந்து நிலமைகளைப் பார்வையிட வேண்டுமென கமநல உதவி ஆணையாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் குறித்த குளக்கட்டுச் சீரமைப்பு மற்றும் யானைவேலி அமைப்பது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்த கமநல உதவி ஆணையாளர், எதிர்வரும் 27ஆம் திகதி குறித்த பகுதிகளுக்கு நேரடியாக வருகைதந்து நிலமைகளை தாம் பார்வையிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

blank

Related

Tags: mulliteevuravikaran mpsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!

Next Post

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் பட்டப்பகலில் துவிச்சக்கர வண்டி திருட்டு!

Related Posts

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!
இலங்கை

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!

2026-04-06
வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA!
இலங்கை

வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA!

2026-04-06
எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!
இலங்கை

எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!

2026-04-06
‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” இன்று ஆரம்பம்!
இலங்கை

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” இன்று ஆரம்பம்!

2026-04-06
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
இலங்கை

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

2026-04-06
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-06
Next Post
முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் பட்டப்பகலில் துவிச்சக்கர வண்டி திருட்டு!

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் பட்டப்பகலில் துவிச்சக்கர வண்டி திருட்டு!

அமெரிக்காவில் கொந்தளிக்கும் கடும் பனிப்புயல் – இயல்பு வாழ்க்கை முடக்கம்!

அமெரிக்காவில் கொந்தளிக்கும் கடும் பனிப்புயல் - இயல்பு வாழ்க்கை முடக்கம்!

இங்கிலாந்து கிரிக்கெட் சபை தலைவர் இன்று நாட்டை வந்தடைந்தார்

இங்கிலாந்து கிரிக்கெட் சபை தலைவர் இன்று நாட்டை வந்தடைந்தார்

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!

0
வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA!

வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA!

0
எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!

எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!

0
‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” இன்று ஆரம்பம்!

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” இன்று ஆரம்பம்!

0
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

0
காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!

2026-04-06
வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA!

வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA!

2026-04-06
எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!

எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!

2026-04-06
‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” இன்று ஆரம்பம்!

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” இன்று ஆரம்பம்!

2026-04-06
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

2026-04-06

Recent News

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!

2026-04-06
வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA!

வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA!

2026-04-06
எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!

எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!

2026-04-06
‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” இன்று ஆரம்பம்!

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” இன்று ஆரம்பம்!

2026-04-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.