• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா தமிழகம்
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

Hanushya P by Hanushya P
2026/02/26
in தமிழகம், முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்து வருகிறது. ஆளும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் தி.மு.க. – காங்கிரஸ் தொகுதி உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையே இன்னும் நடைபெறவில்லை. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கான அழைப்பு இன்னும் தி.மு.க. சார்பில் விடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சி அந்த அழைப்புக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், முன்னதாக கடந்த 22-ந் திகதி அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த காங்கிரஸ் தலைமையின் கடிதத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி உள்ளார்.

இந்த கடிதத்தில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 41 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா சீட்டுகள் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை வழங்குவதுடன், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இருந்ததாக கூறப்படுகிறது..அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 23-ந்திகதி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை சந்தித்தார். இந்தநிலையில், கிரிஷ் சோடங்கர் பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் மீண்டும்,

ஆட்சி அதிகாரத்தை விரும்பாத கட்சி உண்டா? நாங்கள் என்ன அறக்கட்டளையா நடத்துகிறோம். என்று தெரிவித்து உள்ளார். மேலும், தங்களுக்கு 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வாக்குகள் இருக்கிறது. 22 ஆயிரம் கிராம கமிட்டிகள் அமைத்துள்ளோம், 63 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்களை நியமித்துள்ளோம். எங்கள் பலத்தை த.வெ.க.வினர் உணர்ந்துள்ளதால் எங்களுக்கு திறந்த வெளியில் அழைப்பு விடுத்துள்ளனர் என்றெல்லாம் தெரிவித்து உள்ளார்.

எனவே தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி என்பது இன்னும் மதில் மேல் பூனை போன்று தான் உள்ளது. அதாவது ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்து வராது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில் கிரிஷ் சோடங்கர் உள்ளாட்சி தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னை வரும் ராகுல் காந்தி கடந்த ஜனவரி மாதமே ராகுல் காந்தி சென்னை வருவதாக இருந்த நிலையில் கூட்டணி உறுதி செய்யப்படாததால் அந்த திட்டமிடல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாத நிலையில் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வருகிற மார்ச் 5-ந் திகதி காஞ்சீபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில் நடைபெற உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கிராமக் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் உறுதியாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் ராகுல் காந்தி, நடிகர் விஜய்யுடன் இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மார்ச் முதல் வாரத்தில் இது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு தரவும், 5 முதல் 6 அமைச்சரவை பதவிகள் வழங்கவும், மேலும் பல பொறுப்புகளை வழங்கவும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யின் கட்சி காங்கிரசுக்கு 100 இடங்கள் வரை கூட வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இது காங்கிரசை பலப்படுத்தும் ஒரே வழி என்று ராகுல் காந்தி கருதுவதாக தெரிகிறது. இதற்கு இணையாக தி.மு.க.வும் சலுகையை வழங்க வேண்டும் என ராகுல் காந்தி எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related

Tags: alliance partiesassembly elections in Tamil NaduDMK
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அனர்த்த நிவாரண அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை

Next Post

கம்பஹாவில் இரு லொறிகள் மோதி விபத்து

Related Posts

நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!
உலகம்

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்வு!

2026-08-27
பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள்  குற்றச்சாட்டு!
உலகம்

பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள் குற்றச்சாட்டு!

2026-08-27
இந்தியாவை சோதித்த தினுஷ; மூன்று சதங்களுடன் வரலாற்றில் பெயர் பதித்தார்!
கிரிக்கெட்

இந்தியாவை சோதித்த தினுஷ; மூன்று சதங்களுடன் வரலாற்றில் பெயர் பதித்தார்!

2026-08-27
நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!
இலங்கை

நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!

2026-08-27
மெட்டா நிறுவனத்துக்கு எச்சரிக்கை
அமொிக்கா

குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பு: பெற்றோர்களின் வழக்குக்கு மெட்டா நிறுவனம் இழப்பீட்டுச் சமரசம்!

2026-08-27
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!
உலகம்

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு!

2026-08-27
Next Post
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

கம்பஹாவில் இரு லொறிகள் மோதி விபத்து

போதைப்பொருள் கடத்தல்காரர்  “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

போதைப்பொருள் கடத்தல்காரர் "பொடி லெசி" அழைத்துவரப்பட்டார்!

ஸிம்பாப்வேயை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை அதிகரித்த இந்தியா அணி!

ஸிம்பாப்வேயை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை அதிகரித்த இந்தியா அணி!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்வு!

0
வடக்கில் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் நியமனம்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

0
மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

0
பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள்  குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள் குற்றச்சாட்டு!

0
சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

அம்பலங்கொடை சம்பவம் தொடர்பாக மேலும் 2 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் !

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.