கடந்த 24 மணி நேரத்தில் குற்றங்களுடன் தொடர்புடையதாக நேரடியாக அடையாளம் காணப்பட்ட 15 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குற்றம், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் குற்றங்களில் ஈடுபடும் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பொலிஸார் 26,895 நபர்களிடம் சோதனை நடத்தியுள்ளனர்.
இவர்களில், நாள் பிடியாணையுடன் 236 பேரும், திறந்த பிடியாணையுடன் 109 பேரும், 568 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மது போதையில் வாகனம் செலுத்திய 282 பேரையும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 56 பேரையும், போக்குவரத்து விதிமீறல்களுக்காக 4,160 பேரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.












