13 ஆண்டுகளுக்கு முன்பு கீழே விழுந்து மூளையில் பலத்த காயமடைந்த நிலையில் கோமாவில் இருந்த 32 வயதான ஹரிஷ் ராணாவை கருணை கொலை செய்வதற்கு இந்திய உயர் நீதிமன்றம் இன்று (11) அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கருணைக்கொலைக்கு முதல் முதலாக அனுமதி வழங்கப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும்.
கருணைக்கொலையின் சட்டப்பூர்வத்தன்மையை அங்கீகரித்த உயர் நீதிமன்ற தீர்ப்பின் பல அம்சங்களை தெளிவுபடுத்தியது.
நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய நீமன்ற அமர்வால் அனுமதி வழங்கப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் 32 வயதான ஹரிஷ் ராணா.
2013 ஆம் ஆண்டு கல்லூரி மாணவராக இருந்தபோது விடுதியின் 4 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் கோமா நிலைக்கு சென்றார்.
கடந்த 13 ஆண்டுகளாக ஹரிஷ் ராணா கோமா நிலையில் இருந்து வருகிறார்.
அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. உணவுக் குழாய்கள் மூலமே அவருக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த நியூட்ரிஷன் உணவு மற்றும் தண்ணீர் அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் மட்டுமே அவர் உயிர் வாழ்கிறார்.
ராணாவை கருணைக் கொலை செய்ய 2024 இல் அவரது பெற்றோர் டெல்லி மேல் நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
நோயாளி வெண்டிலேட்டர் உதவியில் இருந்தால் மட்டுமே கருணை கொலை சட்டப்படி சாத்தியம் என நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
அதே ஆண்டு அவர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.
உயர் நீதிமன்றம் அவரது உடல்நிலை குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தகத்து.
இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெபி பர்திவாலா, கேவி விஸ்வநாதன் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.















