• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
கொல்கத்தாவை வீழ்த்தி 13 வருடகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்த மும்பை!

கொல்கத்தாவை வீழ்த்தி 13 வருடகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்த மும்பை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/30
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்றிரவு (29) 2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது 06 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

ரோஹித் ஷர்மா மற்றும் ரியான் ரிகல்டனின் வலுவான தொடக்க விக்கெட்டுக்கான இணைப்பாட்டத்தினால் 221 என்ற மிகப்பெரிய வெற்றி இலக்கினை மும்பை ஐந்து பந்துகள் மீதமிருந்த நிலையில் கடந்தது.

2026.03.29 தினத்தக்கு முன்பு, மும்பை இந்தியன்ஸ் அணி தங்களின் முந்தைய ஏழு சேஸிங்கிலும் 220 ஓட்டங்களுக்கு மேற்பட்ட இலக்கை ஒருபோதும் துரத்திப் பிடித்ததில்லை. 

மேலும், 2012-ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு ஐ.பி.எல். சீசனின் தொடக்க ஆட்டத்திலும்  அவர்கள் வெற்றி பெற்றதும் இல்லை. 

2012 ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான எட்டு விக்கெட் வெற்றிக்குப் பின்னர் ஒவ்வொரு சீசனின் தொடக்க ஆட்டத்திலும் தோல்வியடைந்து வந்தது.

இந்த 13 ஆண்டுகால தோல்விப் பயணமானது நேற்றைய தினம் வான்கடேயில் 5 முறை சம்பியன் பட்டம் வென்ற அவர்களின் சொந்த மைதானத்தில் ரோஹித் ஷர்மாவின் அபாரமான ஆட்டம் மற்றும் ரியான் ரிகல்டனின் வலுவான பங்களிப்பாலும் முடிவுக்கு வந்தது.

blank

நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்தது.

அதன்படி,  முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்களை குவித்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித் தலைவர் அஜிங்க்யா ரஹானே 67 (40) ஓட்டங்களையும், ஃபின் ஆலன் 37 (17) ஓட்டங்களையும் பெற்று வலுவான தொடக்கத்தை அளித்தனர்.

அதன் பின்னர் அங்கிரிஷ் ரகுவன்ஷி 51 (29) ஓட்டங்களையும், ரிங்கு சிங் 33 (21) ஓட்டங்களையும் எடுத்து தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

blank

மும்பை சார்பில் பந்து வீச்சில் ஷர்துல் தாக்கூர் 4 ஓவர்களுக்கு 39 வழங்கி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 19.1 ஓவர்களில 6 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களை எடுத்து வெற்றி ‍இலக்கினை கடந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமறிங்கிய ரியான் ரிக்கல்டன் 81 (43) ஓட்டங்களையும் மற்றும் ரோஹித் ஷர்மா 78 (38) ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்து வெற்றிக்கு நங்கூரமிட்டனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார்.

 

 

 

 

 

Related

Tags: IPL 2026Kolkata Knight RidersMumbai IndiansRohit Sharmaகொல்கத்தா நைட் ரைடர்ஸ்மும்பைமும்பை இந்தியன்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2026 இல் இதுவரை 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!

Next Post

தேசிய மக்கள் சக்தி எம்.பி.யின் வாகனம் விபத்து!

Related Posts

ரஷ்யாவின் முக்கிய தானிய ஏற்றுமதி துறைமுகம் மீது உக்ரைன்  தாக்குதல்!
உலகம்

ரஷ்யாவின் முக்கிய தானிய ஏற்றுமதி துறைமுகம் மீது உக்ரைன் தாக்குதல்!

2026-08-13
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 93 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு!
இலங்கை

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 93 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு!

2026-08-13
மீனவர்கள் கைது விவகாரம்; தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டெல்லி பயணம்!
இந்தியா

மீனவர்கள் கைது விவகாரம்; தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டெல்லி பயணம்!

2026-08-13
நாய்கள் மனித முகபாவனைகளைத் திறமையாக அடையாளம் காண்கின்றன – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
ஆசிரியர் தெரிவு

நாய்கள் மனித முகபாவனைகளைத் திறமையாக அடையாளம் காண்கின்றன – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

2026-08-13
ரூ. 25 மில்லியன் பெறுமதியான வீட்டு கட்டுமான மோசடி தொடர்பில் ஒருவர் கைது!
இலங்கை

ரூ. 25 மில்லியன் பெறுமதியான வீட்டு கட்டுமான மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

2026-08-13
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இருவர் கைது!

2026-08-13
Next Post
தேசிய மக்கள் சக்தி எம்.பி.யின் வாகனம் விபத்து!

தேசிய மக்கள் சக்தி எம்.பி.யின் வாகனம் விபத்து!

விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை!

விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை!

எரிபொருள் மீதான வரியை கணிசமாகக் குறைத்தது அவுஸ்திரேலியா!

எரிபொருள் மீதான வரியை கணிசமாகக் குறைத்தது அவுஸ்திரேலியா!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.