மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்பட்ட சிரயாதீவு பிரதேச வாலியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீருக்கடியில் சூட்சூமமான முறையில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைத்தனர் .
இச்சுற்றி வளைப்பு தேடுதலின் போது 8 பரள்களில் 800 லீட்டர் கோடா மற்றும் 160 லீட்டர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன் கசிப்பு உற்பத்தி செய்யும் பெருமளவு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன
காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எ.எஸ்.எம்.ஏ. றஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர்
சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது இவ்வாறு கசிப்பு உற்பத்தி நிலையத்தில் கசிப்பு உற்பத்திக்கான பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களும் பரள்கள் போத்தல்கள் பலன்கள் என்பனவும் பொலிசாரினர் கைப்பற்றப்பட்டுள்ளன .
சந்தேக நபர்கள் தப்பியோடிள்ளதுடன், கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.













