294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கியது.
வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களின் ஜனநாயகக்கடமையை ஆற்றத் துவங்கியுள்ளனர்.
மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஆளும் மேற்கு வங்கத்திற்கும் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
294 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்திற்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
திரிணமுல் காங்கிரஸ் – பாஜ இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
முதற்கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
எஞ்சிய தொகுதிகளுக்கு ஏப்ரல் 29ம் திகதி 2வது கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியால், 89 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
இந்த சூழலில் அங்கு முதல்முறையாக தேர்தல் நடைபெறுகிறது.
இன்று நடக்கும் தேர்தலில் 3.6 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
காலை 7 மணிக்கு துவங்கிய வாககுப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும்.
தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 2.4 லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.














