• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/21
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் செயற்பாட்டு பணிப்பாளராக கடையாற்றிய ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மர்மான மரணம் தொடர்பான விசாரணை நேற்று குளியாபிட்டிய நீதவான் மிஹில் சிரந்தன சதரசிங்க முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மரணமடைந்தவரின் மனைவி, மகள் உள்ளிட்ட குழுவினரும், பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவும் சாட்சியமளித்தனர்.

வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹணவினால் வழக்கின் சாட்சியங்கள் வழிநடத்தப்பட்டன.

உயிரிழந்தவரின் மனைவியான நிஸ்சங்க ஆராச்சிலாகே சீலவதி சாட்சியமளிக்கையில், கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி தாம் பாடசாலைக்குச் சென்றுவிட்டு முற்பகல் 10.50 அளவில் மீண்டும் வீட்டிற்கு வந்ததாகக் குறிப்பிட்டார்.

அந்த நேரத்தில் கணவர் வீட்டில் இல்லாததால், குடும்ப நண்பரான உதய மற்றும் தோட்டத்தில் வேலை செய்த ரணவீர ஆகியோருடன் இணைந்து தேடியதாகக் கூறினார்.

பின்னர் வெற்றிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த கருணா என்பவர் கணவர் தோட்டத்தின் நடுவே விழுந்து கிடப்பதாகத் தகவல் தந்ததாகவும், அங்கு சென்றபோது அவர் விழுந்து கிடந்ததைக் கண்டதாகவும் குறிப்பிட்டார்.

பின்னர் 1990 அவசர நோயாளர் காவுவண்டி சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் வந்து சோதித்து அவர் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சான்று பொருட்களாக நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்ட கணவரின் ஆடைகள், காலணிகள் மற்றும் காய்கறி வெட்டுவதற்குப் பயன்படுத்தும் கத்தி ஆகியவற்றை அவர் அடையாளம் காட்டினார்.

ஊடகங்கள் வாயிலாக எழுப்பப்படும் பல்வேறு கேள்விகள் தங்களுக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட மனைவி, தனது கணவரின் மரணம் குறித்து எந்தவொரு இடத்திலும் தாம் சந்தேகம் எழுப்பவில்லை என்றும், தற்போதும் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகக் கூறினார்.

இதனிடையே, உயிரிழந்தவரின் மகள் சாட்சியமளிக்கையில், அன்றைய தினம் தாம் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் எவ்வித சத்தமும் கேட்கவில்லை என்றும், தந்தை முந்திரி பழம் பறிப்பதற்காகத் தோட்டத்தின் கீழ் பகுதிக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார் என்றும் குறிப்பிட்டார்.

மரணமடைந்தவரை முதன்முதலில் பார்த்த கருணாவதி சாட்சியமளிக்கையில், வழக்கமாக வெற்றிலை பறிக்கும் பக்கத்தில் அல்லாமல் தோட்டத்தின் மறுபக்கத்தில் வேலை செய்துகொண்டிருந்ததால் தாம் எதையும் பார்க்கவில்லை என்றும், பின்னர் நடந்து சென்றபோது ரங்க தோட்டத்தின் நடுவே விழுந்து கிடப்பதைக் கண்டு கூச்சலிட்டதாகவும் கூறினார்.

இதனிடையே, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவிடம், இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினாரா என்று பொலிஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த கம்மன்பில, தாம் அவ்வாறான ஒரு கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவில்லை என்றும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவக் குழுவொன்றை நியமித்து அனுப்பப்பட்ட கடிதத்தில் “மனைவி சந்தேகம் தெரிவிப்பதால் நியமிக்கப்படுகின்றது” எனக் குறிப்பிடப்பட்டிருந்த பகுதியை மட்டுமே தாம் ஊடகங்களுக்குச் சுட்டிக்காட்டியதாகக் கூறினார்.

உதய கம்மன்பில சார்பில் சட்டத்தரணி அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் முன்னிலையாகியிருந்தனர்.

மேலதிக சாட்சியங்களை விசாரணை செய்வதை எதிர்வரும் ஜூன் மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் சாட்சியாளர்களை முன்னிலைப்படுத்துமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

Related

Tags: Court orderranga nishanthasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சர்வதேச தேயிலை தினம் இன்று!

Next Post

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

Related Posts

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
அம்பாறை

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

2026-05-21
சர்வதேச தேயிலை தினம் இன்று!
இலங்கை

சர்வதேச தேயிலை தினம் இன்று!

2026-05-21
காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!
இலங்கை

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கலந்துரையாடல் இன்று!

2026-05-21
பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
இலங்கை

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினர் போராட்டம்!

2026-05-21
தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 
இலங்கை

பிள்ளையானை நேரில் சந்தித்தது ரகசியமானது அல்ல – நாமல் ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவிப்பு!

2026-05-21
பிள்ளையானை இயக்கியது மஹிந்த ராஜபக்ஷ குடும்பமா? அசாத் மௌலானா  வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்!
இலங்கை

பிள்ளையானை இயக்கியது மஹிந்த ராஜபக்ஷ குடும்பமா? அசாத் மௌலானா வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்!

2026-05-20
Next Post
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

0
ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

0
சர்வதேச தேயிலை தினம் இன்று!

சர்வதேச தேயிலை தினம் இன்று!

0
காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கலந்துரையாடல் இன்று!

0
பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது!

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினர் போராட்டம்!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

2026-05-21
ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

2026-05-21
சர்வதேச தேயிலை தினம் இன்று!

சர்வதேச தேயிலை தினம் இன்று!

2026-05-21
காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கலந்துரையாடல் இன்று!

2026-05-21
பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது!

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினர் போராட்டம்!

2026-05-21

Recent News

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

2026-05-21
ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

2026-05-21
சர்வதேச தேயிலை தினம் இன்று!

சர்வதேச தேயிலை தினம் இன்று!

2026-05-21
காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கலந்துரையாடல் இன்று!

2026-05-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.