பொலிஸ் அதிகாரிகள் மீதான தாக்குதல்கள், பெண் அதிகாரிக்கு விடுக்கப்பட்ட பாலியல் அச்சுறுத்தல், யூதர்களுக்கு எதிரான இனவெறி கருத்துக்கள் (Antisemitic abuse) மற்றும் ஒருவரைத் தாக்கியமை உள்ளிட்ட பல்வேறு வெறுப்புணர்வுக் குற்றச்சாட்டுகளின் கைது செய்யப்பட்ட 20 வயதுடைய இளைஞன் ஒருவருக்கு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கார்டிஃப் நகரின் கிராஞ்ச்டவுன் (Grangetown) பகுதியைச் சேர்ந்த ரஷீத் ஜாமா (Rasheed Jama) என்ற 20 வயது இளைஞரே இவ்வாறு தண்டனை பெற்றுள்ளார்.
கார்டிஃப் கிரவுண் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், ஸ்வான்சீ சிறைச்சாலையிலிருந்து காணொளித் தொழில்நுட்பம் (Video link) ஊடாக அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கடந்த 2025 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர் மறுநாள் பொலிஸார் நடத்திய விசாரணையின் போது, தான் செய்த செயல்களுக்காக அவர் எவ்வித வருத்தமும் (Remorse) தெரிவிக்கவில்லை.
அவரது அனைத்துக் குற்றங்களும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 18 மாத காலச் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
எனினும், இக்குற்றங்களுக்காக அவர் ஏற்கனவே நீண்டகாலம் சிறைக்காவலில் (Custody) இருந்துவிட்டமையினால் , சட்ட விதிகளின்படி அவர் இன்னும் சில தினங்களில் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.














