வட அயர்லாந்தில் கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் 21 பேருக்கு எம்பாக்ஸ் (Mpox) தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டிலிருந்து ஒட்டுமொத்தமாகவே வட அயர்லாந்தில் வெறும் 9 எம்பாக்ஸ் பாதிப்புகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், தற்போது கடந்த சில வாரங்களில் இந்த எண்ணிக்கை மிகத் தீவிரமாக அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய சூழலில், ஓரினசேர்கையில் ஈடுபடும் ஆண்களிடையே (MSM) இந்தத் தொற்று பாதிப்பு அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்தத் தடுப்பூசியைப் பெற தகுதியுடையவர்கள், தங்களின் உள்ளூர் பாலியல் ஆரோக்கிய மருத்துவகங்களைத் தொடர்பு கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு பொது சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.














